

டெல்லியில் மருத்துவர் தற்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.
டெல்லி துர்காவிஹார் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராஜேந்திர சிங். கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது வீட்டில் இரு பக்க கடிதம் சிக்கியது. அதில் தனது தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் என்பவர் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்து தற்கொலை முடிவு எடுத்ததாகவும் தான் தற்கொலைக்கு பிரகாஷ் ஜர்வால் தான் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் மீது கொலை மிரட்டல் விடுத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் போலீஸார் பிரகாஷ் ஜர்வாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக வில்லை. இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தி பிரகாஷ் ஜர்வாலை கைது செய்தனர்.