Published : 09 May 2020 01:07 PM
Last Updated : 09 May 2020 01:07 PM

டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன் கரோனா தீவிர பாதிப்புடையோருக்கு மட்டும் மறுபரிசோதனை: சுகாதார அமைச்சகம்-எழும் கடும் விமர்சனம்

கரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கான வழிகாட்டுதல்களில் சுகாதார அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது.

அதாவது கரோனா பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்களுக்கு மட்டுமே கபம் மறுபரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று ரிப்போர்ட் வாங்க வேண்டும், சாதாரண கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு டிஸ்சார்ஜின் போது பரிசோதனை தேவையில்லை என்று சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறியை வகுத்துள்ளது.

மிகமிதமான நோய்க்குறிகள், மிதமான நோய்க்குறிகள், குறி தெரிவதற்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள், ஆகியோருக்கு டிஸ்சார்ஜ் டெஸ்ட் தேவையில்லை என்று கூறுகிறது சுகாதார அமைச்சகம்.

முன்பு கரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு 14ம் நாள் 21-ம் நாள் மறுபரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று இருந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது கரோனா நோயாளிகளை வகைப்பிரிக்கும் போது, மிகமிதமான, மிதமான, மற்றும் கடுமையான என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வழிகாட்டுதலின் படி மிதமான, மிகமிதமான கரோனா நோயாளிகளுக்கு உடல் உஷ்ணம் மட்டும் நாடித்துடிப்பு மட்டும் பார்க்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

“அதாவது நோய்க்குறி தோன்றி 10 நாட்களில் இவர்களுக்கு காய்ச்சல் 3 நாட்களுக்கு இல்லையெனில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். இவர்க்ளுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன் கரோனா லேப் டெஸ்ட் தேவையில்லை” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது வீட்டில் 7 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள்.

சரி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் ஜுரம், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் கோவிட்-19 மருத்துவமனையைத் தொடர்பு கொள்வது அவசியம். அல்லது மாநில உதவிமையத்தையோ அல்லது 1075 என்ற உதவி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம். இதற்குப் பிறகு 14 நாட்கள் சென்று டெலிகான்பரன்ஸ் மூலம் இவர்கள் உடல் நலம் விசாரிக்கப்படும்.

மிதமான கரோனா நோயாளிகளுக்கு உடல் உஷ்ணம், பிராணவாயு நிலை ஆகியவை சோதிக்கப்படும். இவர்களுக்கு 3 நாட்கள் காய்ச்சல் வராமல் இருந்தாலோ இவர்கள் வெளியிலிருந்து கொடுக்கப்படும் பிராணவாயு ஆதரவில்லாமல் 4 நாட்களுக்கு இருந்தாலோ சிம்ப்டம் வந்து 10 நாட்களில் இவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

இவர்களுக்கும் 7 நாட்கள் வீட்டுத் தனிமை உண்டு.

எய்ம்ஸ் மருத்துவர் விமர்சனம்:

எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்க பொதுச் செயலர் ஸ்ரீநிவாச ராஜ்குமார், இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து, “கரோனா நோயாளிகளை மீண்டும் டெஸ்ட் செய்யாமல் டிஸ்சார்ஜ் செய்வது அழிவை நோக்கிய முடிவாகும்.

இவர்கள் டெஸ்ட் செய்யப்படாமல் அனுப்பப்படும் போது சமூகப் பரவலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 40 நாட்களாக போதுமான டெஸ்ட் வசதிகளை உருவாக்காமல் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? உத்தேச கணக்கீட்டின் படி 2 லட்சம் இந்தியர்களை கரோனாவுக்குப் பலி கொடுக்க முடிவா?” என்று சாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x