Published : 08 May 2020 09:23 PM
Last Updated : 08 May 2020 09:23 PM

கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள், பருப்பு வகைகள்: மத்திய அரசு நடவடிக்கை

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நாடு முழுக்க சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள், பருப்பு வகைகளை இலவசமாக வழங்குவதற்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

``பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜ்னா'' திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் உணவு தானியங்கள் அளிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இந்தத் தகவலை இன்று தெரிவித்தார்.

இதற்காக இந்திய உணவுக் கார்ப்பரேசன் நிறுவனம் 2641 ரயில் பெட்டிகளில் கோதுமை மற்றும் அரிசி மூட்டைகளை ஏற்றியுள்ளது. மொத்தம் 73.92 இலட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு (அரிசி 55.38 இலட்சம் மெட்ரிக் டன், கோதுமை 18.57 இலட்சம் மெட்ரிக் டன்) ஏற்றப்பட்டுள்ளன. 24.03.2020 (நாடு முழுக்க முடக்கநிலை அமல் செய்யப்பட்ட தேதி) நாளில் இருந்து 08.05.2020 வரையிலான காலத்தில் இதுதான் அதிக அளவிலான உணவு தானிய நகர்வுக்கான ஏற்பாடாக இருக்கிறது.

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாத விநியோகத்தில் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பணிகளை முடித்துவிட்டன. இந்த 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுமார் 41.35 கோடி பயனாளிகளுக்கு இவை வழங்கப் பட்டுள்ளன. அந்தமான் நிக்கோபர் தீவு, தாத்ராநகர் மற்றும் ஹவேலி, டாமன் & டையூ, மத்தியப்பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு மாதத்துக்கான உணவு தானியங்கள் ஒரே தவணையில் வழங்கப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் படியான குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் சுமார் 6 கோடி பேருக்கு விசேஷ குறுஞ்செய்தித் தகவல்களை 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அனுப்பியுள்ளன. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் ஆதாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த குறுஞ்செய்தித் தகவல்கள் கைபேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார சங்கடங்களை ஏழைகள் எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் அமல்படுத்தப் படுகிறது. பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ள ஏழைக் குடும்பம் அல்லது ஏழைகள் யாரும், அடுத்த 3 மாதங்களுக்கு உணவு தானியம் கிடைக்காமல் துன்புறக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

அதன்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 80 கோடி தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் படியான குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் பயனாளிகளுக்கும் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கூடுதல் உணவு தானியங்களை, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத காலத்துக்கு வழங்குவதற்கான கொள்கை முடிவை, உணவு மற்றும் பொது விநியோகத் துறை எடுத்துள்ளது. ரொக்க உதவிகளை நேரடியாகக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை அமல் செய்யும் யூனியன் பிரதேசங்களும் இதில் அடங்கும்.

உணவு தானியங்கள் தவிர, 19.50 கோடி குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு வகைகளையும் அரசு வழங்குவதாக அமைச்சர்பாஸ்வான் கூறினார். முதன்முறையாக நுகர்வோர் விவகாரங்கள் துறை இவ்வளவு அதிக அளவில் பருப்பு வகைகளைக் கையாள்கிறது என்றார் அவர். நாடு முழுக்க நாபெட் கிடங்குகளில் இருப்பில் உள்ள பருப்புகளை இத் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக இதுவரையில் 100க்கும் மேற்பட்ட பருப்பு மில்களின் சேவையை நாபெட் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் தேவைகளை சமாளிப்பதற்கு ஏற்ற அளவில் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கொள்முதல் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x