Published : 08 May 2020 07:26 AM
Last Updated : 08 May 2020 07:26 AM

விசாகப்பட்டினம் தனியார் தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிந்து சிறுமி உட்பட 11 பேர் உயிரிழப்பு; 2,000 பேர் மருத்துவமனையில் அனுமதி- கவலைக்கிடமான நிலையில் உள்ள 200 பேருக்கு தீவிர சிகிச்சை

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் செயல்படும் ரசாயன தொழிற்சாலையில் நேற்று அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந் தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இதில் 200 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஆந்திராவில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட தைத் தொடர்ந்து விசாகப்பட்டினம் ஆர்.ஆர்.வெங்கடாபுரம் பகுதியில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் லிமிடெட் என்கிற ரசாயன தொழிற்சாலையில் 33 சதவீத ஊழி யர்களுடன் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் விஷவாயு கசிவு ஏற்பட்டது.

சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு விஷவாயு பரவியது. ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், காது வலி ஏற்பட்டது. அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

அப்போது குழந்தைகள், முதியோர், பெண்கள் என பலர் சாலை, தெருக்களில் மயங்கி விழுந்தனர். இருசக்கர வாகனங் களில் தப்பிச் சென்றவர்களும் சிறிது தொலைவிலேயே மயங்கி சாய்ந்தனர். நாய், ஆடு, மாடுகளும் மயங்கி விழுந் தன. சில மரங்களும் கருகின.

தகவல் அறிந்த போலீஸார் ,தீய ணைப்பு படை வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மயங்கி விழுந் தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விசாகப்பட்டினம் கே.ஜி.எச். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது வரை சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். கண் எரிச்சலால் வீட்டில் இருந்து வெளியே ஓடிய கிராமவாசி, தரை கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் 200-க்கும் மேற்பட்டோரின் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

முதல்வர் விரைந்தார்

விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யர் வினய்சந்த், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி னார். விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண் டும் என ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டார். பின்னர், அமராவதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத் துக்கு விரைந்து வந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஹெலிகாப்டரில் சம்பவ இடங்களை பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிப்பு நிலவரத்தை கேட்டறிந்தார். ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

குடியரசு துணைத் தலைவர் வெங் கய்ய நாயுடு, முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு உள்ளிட்டோர் உயிரிழந் தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் சுமார் 213 ஏக்கர் பரப்பளவில் ரூ. 168 கோடி முதலீட்டில் கடந்த 1961-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் ராசாயன தொழிற்சாலை தொடங்கப்பட்டது. கடந்த 1978-ம் ஆண் டில் இந்த தொழிற்சாலையை யூ.பி. குரூப் வாங்கியது. அதன் பின்னர் கடந்த 1997 ஜூலையில் தென் கொரிய நிறுவனமான எல்.ஜி. குரூப்ஸ் (எல்.ஜி. கெமிக்கல்ஸ்) தொழிற்சாலையை வாங்கி, எல்.ஜி. பாலி மர்ஸ் லிமிடெட் என பெயர் சூட்டியது. இங்கு தினமும் 417 டன் பாலிஸ்டெரெயின் ரசாயனம் தயாரிக்கப்படுகிறது.

விசாகப்பட்டினம் கே.ஜி.எச். அரசு மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீநிவாஸ் கூறியதாவது:

பாலிஸ்டெரெயின் ரசாயனம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. விசாகப்பட்டினம் தொழிற் சாலையில் இருந்து கசிந்த விஷவாயுவை சுவாசித்தவர்களுக்கு முதலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். தலைவலி, மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், காது கேளாமை ஏற்படும். அதி கமாக விஷவாயுவை சுவாசித்திருந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'அலட்சியமே காரணம்'

மாவட்ட ஆட்சியர் நவீன் சந்த்தின் உத்தரவின்பேரில் போலீஸ் உயர் அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

ஊரடங்கு அமலில் இருப்பதால், ரசாயன தொழிற்சாலையை பராமரிப்பு செய்ய 45 பேருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலையை முறையாக பராமரிக்காததால், டேங்கர் களில் சுமார் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஸ்டெ ரெயின் நிலுவையில் இருந்துவிட்டது. பணியாளர்கள் நேற்று குழாயை திறந்த போது ஒட்டுமொத்த ரசாயன வாயுவும் வெளியில் பரவ தொடங்கிவிட்டது. இதற்கு தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என்பது முதல்கட்ட விசா ரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்தார் முதல்வர்

மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எல்.ஜி. பாலிமர்ஸ் ஒரு வெளிநாட்டு நிறுவனமாகும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் தொழிற்சாலை வேறு இடத்துக்கு மாற்றப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும். வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ. 10 லட்சம், மூச்சுச் திணறலால் பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ. 25 ஆயிரம், சுற்றுப்புற கிராம மக்களுக்கு குடும்பத்துக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x