Published : 07 May 2020 02:43 PM
Last Updated : 07 May 2020 02:43 PM

கரோனா வைரஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு அருகில் இறந்தவர்களின் உடல்கள்: பீதியைக் கிளப்பிய மருத்துவமனை -உடல்களை வாங்க மறுக்கும் உறவினர்கள்- மும்பையில் அவலம்

மும்பையில் சியான் மருத்துவமனையில் கோவிட்19 சிகிச்சை வார்டிலேயே இறந்தவர்களின் உடல்களையும் வைத்திருக்கும் பயங்கரம் வைரல் வீடியோவாகி வருகிறது.

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைப் பிரிவிலேயே எப்படி இறந்தவர்கள் உடலை வைக்க முடியும்? இது அங்கு சிகிச்சை பெறுபவர்களின் மனநிலையை எப்படி பாதித்திருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்த சியான் மருத்துவமனை மும்பை நகராட்சியினால் நடத்தப்படும் மருத்துவமனையாகும். கரோனா நோயாளிகள் படுக்க வைக்கபட்டிருக்கும் படுக்கைகளுக்கு அருகிலேயே சுமார் 7 இறந்த உடல்கள் வைக்கப்பட்டிருந்தன.

கோவிட்-19 நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள வருபவர்கள் கொஞ்சம் கூட அதிர்ச்சியடையாமல் இறந்த உடல்களை கண்டும் காணாமல் வந்த வேலையை முடித்து விட்டுச் செல்வதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது..

இந்த வீடியோவை பாஜகவைச் சேர்ந்த நிதேஷ் ரானே தன் சமூக ஊடகப்பக்கத்தில் பகிர்ந்தார்.

அதில், “சியான் மருத்துவமனையில் நோயாளிகள் பிணங்களுக்கு அருகே சிகிச்சைப் பெறுகின்றனர். இது ரொம்ப மோசம். என்ன நிர்வாகம், வெட்கக்கேடு” என்று ட்வீட் செய்துள்ளார்.

உடல்களை வாங்க மறுக்கும் உறவினர்கள்:

சியான் மருத்துவமனை டீன் பிரமோத் இங்காலே கூறும்போது, கரோனாவினால் பலியானோர் உடல்களை வாங்க உறவினர்கள் மறுக்கின்றனர். அதனால்தான் இங்கு உடல்கள் உள்ளன, இதோடு நாங்கள் உடல்களை அகற்றியிருக்கிறோம், விசாரணையும் நடைபெற்று வருகிறது.

மார்ச்சுவரியில் 15 பிணங்கள்தான் வைக்க முடியும். 11 பிணங்கள் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளன, மேலும் மற்ற நோய்களில் இறந்தவர்களுடன் கரோனாவினா மரணித்தவர்களை வைப்பதும் கஷ்டம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x