

குஜராத்தில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக 2 ரயில் களில் சுமார் 2,400 தமிழர்கள் காத்திருக்கின்றனர்.
ஊரடங்கு காரணமாக பேருந்து, ரயில், மற்றும் இதர போக்குவரத்து நாடு முழுவதும் முடக்கப்பட்டன. இதனால் பல்வேறு மாநி லங்களில் பணியாற்றிய வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடி யாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வெளி மாநில தொழிலாளர்களை பேருந்து, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங் கியது. இதையடுத்து, குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் சிக்கியிருந்த மதுரையைச் சேர்ந்த 36 பேர் முதற்கட்டமாக பேருந்தில் சொந்த ஊர் அனுப்ப அம்மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். இதற்கு அம்மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இயங்கி வரும் தமிழ் சங்கங்களும் உதவி இருந்தன.
இந்நிலையில், இந்த தமிழ்ச் சங்கங்கள் அடுத்தகட்டமாக 2,400 தமிழர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் பல்வேறு தொழிற் சாலைகள் முன்பு இட்லி வியா பாரம் மற்றும் தெருக்களில் துணி, பாத்திரம் விற்பவர்கள் ஆவர்.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இவர் களின் தகவல்களை திரட்டி ஒருங் கிணைத்துள்ள சூரத், வாபி, அகம தாபாத், நவ்சாரி ஆகிய நகரங் களின் தமிழ் சங்கங்கள், அவற்றை மாநில அதிகாரியான பி.பாரதி ஐஏஎஸ்-யிடம் ஒப்படைத்தன.
இந்த தகவல் தமிழக அரசுக் கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த 2,400 தொழிலாளர்களும் சொந்த ஊர் திரும்புவதற்காக 2 சிறப்பு ரயில் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இணையதளத்திலும் இவ்விரண்டு ரயில்களில் செல்லும் பயணிகள் விவரமும் நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் குஜராத்தின் தமிழ் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "தமிழக தொழிலாளர்களை சொந்த ஊர் திருப்பி அனுப்புவதற்காக அனுமதி கிடைத்து 2 ரயில்கள் தயார் நிலையில் உள்ளன. இத் தகவலை ஏற்ற தமிழக அரசின் பொறுப்பு அதிகாரியான அத் துல்ய மிஸ்ரா, இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் உள்ளார். முகாம்களில் இல்லாமல் பல்வேறு நகரங்களின் மூலை முடுக்குகளில் தமிழர்கள் சிதறியுள்ளனர். தமிழக அரசிடமிருந்து எங்களுக்கு பதில் கிடைத்தால்தான் அனைத்து தமிழர் களையும் அகமதாபாத் மற்றும் சூரத் ரயில்நிலையங்களில் ஒருங் கிணைக்க முடியும்" என்றனர்.
இதற்கிடையே கடந்த 3-ம் தேதி குஜராத்திலிருந்து மதுரைக்கு பேருந்தில் புறப்பட்ட 36 பேர் நேற்று முன்தினம் திண்டுக்கல் லில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு அனைவருக்கும் மருத் துவப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு தெரிந்த பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படு வார்கள் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.