Published : 07 May 2020 07:44 AM
Last Updated : 07 May 2020 07:44 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 50,000-ஐ தாண்டியது

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 50 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 3 நாட்களில் மட்டும் புதிதாக 10,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "கரோனா வைரஸ் தொற்று, உயிரிழப்பு குறித்து நாள்தோறும் காலை, மாலையில் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. இனிமேல் காலை மட்டுமே புள்ளி விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இந்த நடைமுறை மே 6 முதல் அமலுக்கு வந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை மட்டுமே புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அதில், "நாடு முழுவதும் 49,391 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,183 பேர் குணமடைந்துள்ளனர். 1,694 பேர்உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் நேற்றிரவு ஒளிபரப்பு செய்த செய்தியில், "நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,545 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும்புதிதாக 10,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 16,758 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டது.

உலக நாடுகளுடன் ஒப்பீடு

கரோனா வைரஸ் பாதிப்பில் உலகளாவிய அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி 21-ம் தேதி, முதல் கரோனா வைரஸ்நோயாளி கண்டறியப்பட்டார். இரண்டே மாதங்களில் அதாவது கடந்த மார்ச் 24-ம் தேதி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. அப்போது அந்த நாட்டின் உயிரிழப்பு 957 ஆக இருந்தது.

கரோனா வைரஸ் பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் கடந்த ஜனவரி 31-ம் தேதி, முதல் கரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டார். கடந்த மார்ச்26-ம் தேதி அந்த நாட்டில் வைரஸ்நோயாளிகளின் எண்ணிக்கை 50ஆயிரத்தை தாண்டியது. அப்போதுவரை வைரஸ் பாதிப்பால் 4,365 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த ஜனவரி 31-ம் தேதி, முதல்முறையாக 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த மார்ச் 21-ம் தேதிஅந்த நாட்டில் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. அப்போது உயிரிழப்பு 4,825 ஆக இருந்தது.

பிரிட்டனில் கடந்த ஜனவரி 29-ம்தேதி, முதல் கரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டார். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. அப்போதுஉயிரிழப்பு 6,433 ஆக இருந்தது.

பிரான்ஸில் கடந்த ஜனவரி இறுதியில் முதல் கரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு டிசம்பர் 27-ம் தேதியே 42 வயது நபர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்றுசில நாட்களுக்கு முன்பு வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதிஅந்த நாட்டில் கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50ஆயிரத்தை தாண்டியது. அப்போதுஉயிரிழப்பு 3,523 ஆக இருந்தது.

ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி19-ம் தேதி, முதல் கரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டார். கடந்த மார்ச் 27-ம் தேதி அந்த நாட்டில் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. அப்போது உயிரிழப்பு 351 ஆக இருந்தது.

ரஷ்யாவில் கடந்த ஜனவரி 31-ம்தேதி சீன சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி அந்த நாட்டில் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. அப்போது உயிரிழப்பு 456 ஆக இருந்தது.

துருக்கியில் கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் கரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அந்த நாட்டில் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. அப்போது உயிரிழப்பு 1,101 ஆக இருந்தது.

பிரேசிலில் கடந்த பிப்ரவரி 25-ம்தேதி முதல் கரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. அப்போது உயிரிழப்பு 3,670 ஆக இருந்தது.

ஈரானில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் கரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டார். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அந்தநாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. அப்போது உயிரிழப்பு 3,160 ஆக இருந்தது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. அப்போது உயிரிழப்பு 1,259 ஆக இருந்தது.

இந்தியாவின் நிலை

இந்தியாவில் கடந்த ஜனவரி30-ம் தேதி கேரளாவில் முதல்கரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டார். சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1,694 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டேமாதங்களில் கரோனா வைரஸ்நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. சுமார் 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 3 மாதங்களுக்குப் பிறகே வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைதாண்டியுள்ளது. உயிரிழப்பும்கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

எனினும் அடுத்து வரும் வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x