Last Updated : 06 May, 2020 06:04 PM

 

Published : 06 May 2020 06:04 PM
Last Updated : 06 May 2020 06:04 PM

பெட்ரோல், டீசல் வரி உயர்வு: பொருளாதாரரீதியாக தேசவிரோதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: நியாயமில்லாத செயல் : ராகுல் விமர்சனம் 

கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தநிலையில் அதன் பலன்களை மக்களுக்கு வழங்காமல் பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரியை உயர்த்தி ரூ.1.40 லட்சம் கோடிவருவாய் ஈட்டுவது பொருளாதார ரீதியாக தேச விரோதம் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது

பெட்ரோலில் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 10 ரூபாயும் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு நேற்று நள்ளிரவில் உத்தரவு வெளியிட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தும், அந்த பலனை இந்த முறையும் மக்களுக்கு வழங்காமல் மத்திய அரசே எடுத்துக்கொண்டது.

இந்த கலால்வரி உயர்வு மூலம் மத்திய அசுக்கு ரூ.1.60 லட்சம் கோடி வருவாய் கூடுதலாகக் கிடைக்கும். இந்த கலால் வரி உயர்வு மூலம் சில்லரை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்றாலும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தையும் தொடர்ந்து மத்தியஅரசு எடுத்துக்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இதேபோன்று பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 3 ரூபாய் கலால் வரியை மத்தியஅ ரசு உயர்த்தியது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் “ கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தேசமே ஈடுபட்டு வருவதால், கோடிக்கணக்கான சகோதர,சகோதரிகளின் பொருளாதாரம் சீரழிந்து இருக்கிறது. இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு பதிலாக மத்தியஅரசு பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.10, டீசலில் 13 ரூபாயும்உயர்த்தியது நியாயமில்லாதது, இதை திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா காணொலியில் அளித்த பேட்டியில் கூறுகையில் “ ஒட்டுமொத்த தேசமும் கரோனா வைரஸுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் போரட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாலர்கள், கடை உரிமையாளர்கள், சிறு வர்த்தகர்கள், அனைவரும் கையில் பணமில்லாமல் தவிக்கிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் உற்பத்திவரியைஉயர்்த்தி 130 இந்தியர்களிடம் இருந்து மத்தியஅரசு ரூ.140 லட்சம் கோடி பணத்தை கொள்ளையடிக்கிறது. மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிப்பது பொருளாதார ரீதியாக தேச விரோதம். மத்திய அரசு தன்னுடைய இழப்புகளை சட்டவிரோதமாக, வலுக்கட்டாயமாக சரிக்கட்டுவது மனிதநேயமில்லாதது, கொடூரமானுது, உணர்வற்றது


உற்பத்தி வரிமூலம் கிடைக்கும் வரி வருவாயில் 75 சதவீதத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக்கொடுக்க வேண்டும். இனிமேலும் பெட்ரோலிய பொருட்கள் மீது வரியை உயர்த்தி மக்களுக்கு எந்தவிதமான சுமையும் கொடுக்கமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்

இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநிலம் ஆளும் மாநிலமுதல்வர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது அனைத்து தலைவர்களும் கவலை தெரிவி்்த்தனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் வேதனை தெரிவித்தார்கள்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x