Last Updated : 06 May, 2020 06:12 PM

 

Published : 06 May 2020 06:12 PM
Last Updated : 06 May 2020 06:12 PM

பஞ்சாபிலிருந்து 10 நாட்கள் நடைப்பயணம்: 40 பேர் கொண்ட குழு யமுனையைக் கடந்து உ.பி வந்து சேர்ந்தது

பிரதிநிதித்துவப் படம்.

முசாஃபர்நகர் (உத்தரப் பிரதேசம்)

பஞ்சாபின் லூதியானாவில் இருந்து 10 நாட்கள் கால்நடையாக பயணம் செய்த பின்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு, பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் உ.பி.யின் ஷாம்லியை அடைந்தது என்று போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

லாக்டவுனில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என கடந்த ஏப்ரல் 30 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே சிலர் தங்கள் சொந்த ஊருக்கு நடைபயணமாகவே புறப்பட்டு விட்டனர்.

பஞ்சாபின் லூதியானாவில் இருந்து நடைபயணமாக புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு ஒன்று 10 நாட்களுக்கு பின் உத்தரப் பிரதேசத்தை அடைந்துள்ளனர். அவர்கள் ஷாம்லிக்கு செவ்வாய் இரவு வந்தடைந்ததாக உ.பி.காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து உ.பி.காவல்துறை கூறியுள்ளதாவது:

பஞ்சாபிலிருந்து 10 நாட்களாக கால்நடையாக பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளும் இருந்தனர்.. இவர்கள் மொத்தம் 40 பேர்.

செவ்வாய்க்கிழமை மாலை ஷாம்லியில் போலீசார் தடுத்து நிறுத்தியபோது அவர்களது சொந்த இடமான ஃபதேபூர் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

இவர்கள் தங்கள் பயணத்தின் போது ஒரு குழாய் உதவியுடன் யமுனா நதியைக் கடந்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர். எனினும் இவர்கள் அனைவரும் தற்போது கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். முடிவுகள் வந்தவுடன் அவர்கள் சொந்தஊர்களுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு உ.பி.காவல்துறை தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x