

சொந்த இடங்களுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மொத்தம் 115 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
மே1 வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்றுவரை புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 88 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய ரெயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''இன்று 42 கூடுதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்று (மே 6) 42 கூடுதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். புதன்கிழமை மதியம் 1 மணி வரை இதுபோன்ற 22 ரயில்கள் இயக்கப்பட்டன, மொத்தமாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 115 ஆகும்.'' என்றார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மே 4 வரை, இந்திய ரயில்வே 55 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. செவ்வாயன்று, இந்த சிறப்பு ரயில்கள் இதுவரை 70,000 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றுள்ளன'' என்றார்.
சராசரியாக, இந்த ரயில்களில் ஒவ்வொன்றும் சுமார் 1,000-1,200 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. ஒவ்வொரு ரயிலிலும் 24 பெட்டிகள் உள்ளன, ஒவ்வொரு பெட்டியிலும் 72 இருக்கைகள் உள்ளன. இருப்பினும், சமூக இடைவெளி விதிமுறைகளால் இந்த திறன் இப்போது சுமார் 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
.