

பணக்காரர்களை அழைத்து வரும் போது அவர்களுக்கு எந்தவிதமான பரிசோதனையும் இல்லாமல் மாநிலத்துக்குள் அனுமதிக்கும் அரசுகள், ஏழைகளையும், புலம்பெயர் தொழிலாளர்கள் வரும்போது அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி காக்க வைப்பது மனிதநேயமற்ற செயல் என சிவேசனா கட்சி சாடியுள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாபூர்வ நாளேடேனா சாம்னாவில் தலையங்கத்தில் இன்று கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி கரோனா காலத்தில் ஏராளமான பாகுபாடுகளை மக்களிடம் காட்டுகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சிக்கியிருந்த மாணவர்களை மாநிலத்துக்கு அழைத்து வந்தபோது அவர்களிடம் கரோனா பரிசோதனை ஏதும் நடத்தவில்லை.ஏனென்றால், அந்த மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கோட்டா நகரிலிருந்து வந்தவர்கள் அனைவரும் பணக்காரர்கள்
ஆனால், பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து சென்ற உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லும் அவர்களை உள்ளே அனுமதிக்க மாநிலஅரசு அனுமதிக்க மறுக்கிறது. அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்த பின்புதான் அனுமதிப்போம் என காக்க ைவக்கிறது. அவர்களிடம் ரயில் டிக்கெட்டுக்கு பணம் கேட்கிறார்கள். இது கொடூரமானது,மனிதத் தன்மையற்ற செயல். மக்களுக்கு இடையே ஏழை பணக்காரர்கள் என பேதம் பார்க்கிறது.
ஆனால், வேலையின்றி, கையில் பணமின்றி சொந்த மாநிலம் திரும்ப வழியி்ல்லாமல் இருக்கும் புலம்பெயர் தொழிலாலளர்களுக்கு போக்குவரத்து கட்டணத்தை காங்கிரஸ் செலுத்தும் என சோனியா காந்தி அறிவித்தது பாராட்டுக்குரியது.
மகாராஷ்டிரா,குஜராத் மாநிலத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலும் உத்தரப்பிரதேசம், பிஹார், ஒடிசா, ஆந்திாைவச் சேர்ந்தவர்கள். இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்று வரை அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் கட்சி்த் தலைவர்களுக்கும் வாக்குவங்கிகளாகத் தெரி்ந்தார்கள். ஆனால் மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பால்தான் மும்பையும், மாநிலமும் கட்டமைக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது
இக்்கட்டான சூழல், சிக்கல் வரும போது வாக்குவங்கி அரசியலை எதிர்பார்க்கும் தலைவர்கள் ஓடிவிட்டார்கள், அவர்களின் அரசியல் வழிகாட்டிகளைக் காணவில்லை.
புலம்பெயர் தொழிலாளர்கள் நாய்களோ அல்லது பூனைகளோ அல்ல. அவர்கள் சார்ந்திருக்கும் மாநில அரசுகளே அவர்களை அரவணைக்காதபோது, மனிதநேயத்தை காட்டாதபோது எங்கு செல்வார்கள். மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி நல்ல விஷயத்தை குறிப்பிட்டார், மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் சென்று விடலாம், ஆனால், அவர்கள்தங்கள் சொந்தமாநிலத்தில் சென்று என்ன சாப்பிடுவார்கள் எனக் கேட்டார்.
இ்வ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது