Last Updated : 06 May, 2020 12:08 PM

 

Published : 06 May 2020 12:08 PM
Last Updated : 06 May 2020 12:08 PM

ஆரோக்கிய சேது செயலியில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை: ஹேக்கர் எச்சரிக்கைக்கு மத்திய அரசு விளக்கம்

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆரோக்கிய சேது செயலியில் எந்தவிதமான பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. யாருடைய விவரங்களும் திருடப்பட வாய்ப்பில்லை என்று மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது

கொரோனா பரவலைத் தடுக்க, இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட செயலிதான், 'ஆரோக்கிய சேது'. தற்போது, இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வரும் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தச் செயலி, மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்தது.

இந்தச் செயலி, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் மூலம் செயல்படுவதால், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகியிருக்கும். இதன்மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது.

நாடுமுழுவதும் கரோனா பரவல் வேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த செயலியின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இ்ந்த சூழலில் பிரான்ஸைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு வல்லுநர் எலியட் அல்டர்ஸன் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ஆரோக்கிய சேது செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றன. 9 கோடி மக்களின் தனிப்பட்ட விவரங்கள் அச்சுறுத்தலில் இருக்கிறது. என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறீ்ர்களா” எனத் தெரிவித்திருந்தார். ேமலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிட்டும், ஆம் ராகுல்காந்தி கூறியதுசரிதான் இதில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது எனத் தெரிவித்தார்

சமீபத்தில் ஆரோக்கிய சேது செயலி குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில் “ ஆரோக்கிய செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றன. இது ஒரு மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை” எனத் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுநர் எலியாட் கருத்துக்கு விளக்கும் அளிக்கும் மத்திய அரசு இன்று விளக்கறிக்கை வெளியி்ட்டுள்ளது. அதில் “ ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தும் எந்த பயன்பாட்டாளரின் தனிப்பட்ட விவரங்களும் ஹேக்கர்களால் பாதிப்புக்குள்ளாகாது. நாங்கள் தொடர்ந்து இந்த செயலியை ஆய்வு செய்து, பரிசோதித்து வருகிறோம்.

அனைவரின் விவரங்களும் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு ஆரோக்கிய சேதுவின் செயலி பாதுகாப்புகுழு உறுதியளிக்கிறது. நாங்கள் அந்த பிரான்ஸ்வல்லுநரிடம் பேசினோம், பயன்பாட்டாளர் இருக்கும் வசி்ப்பிடத்தை குறிப்பிடுவது ஆலோசி்த்தோம். ஆனால் தனிப்பட்ட விவரங்களுக்கு பாதிப்பில்லை. அனைத்து விவரங்களும் பாதுகாப்பான முறையில் சர்வரில் சேமிக்கப்படும். ஆதலால் தனிப்பட்ட பயனாளிகளின் விவரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x