Published : 05 May 2020 07:01 AM
Last Updated : 05 May 2020 07:01 AM

கூட்ட நெரிசல் காரணமாக டெல்லி மதுக்கடைகள் சில மணி நேரத்தில் மூடல்

டெல்லியில் சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட மதுக்கடைகள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள்கூட்டம் அதிக அளவில் இருந்ததால் உடனடியாக மூடப்பட்டன.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதி வரை 3—வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

எனினும், பாதிப்பு இல்லாதமற்றும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதேநேரம், சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக கரோனா பாதிப்புகாரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதியைத் தவிர மற்றஇடங்களில் வணிக வளாகங்களுக்கு வெளியில் உள்ள மதுக்கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பலமாநிலங்களில் சுமார் 40 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதேநேரம், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்படவில்லை.

இதனிடையே, டெல்லியில் திறக்கப்பட்ட 100 மதுக்கடைகள் முன்பு ஏராளமானோர் கூடினர். சமூக இடைவெளியின்றி அவர்கள் முண்டியடித்தனர். போலீஸார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் ஒரு சில மணி நேரத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன.

ஆந்திராவிலும் கூட்டம்

ஆந்திராவில் சுமார் 40 நாட்களுக்கு பிறகு 25 சதவீத விலை உயர்வுடன் மது விற்பனை நேற்றுதொடங்கியது. இங்கு காலை 11மணி முதல் மாலை 7 மணி வரைமது விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், காலை 7 மணி முதலே மதுக்கடைகள் முன்பு கூட்டம் கூடியது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்றவற்றை யாரும்பின்பற்றவில்லை. சில இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x