

வங்கத்தேசத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் 15 பேருக்கு நீதிமன்றக் காவல் உத்தரவுப் பிறப்பித்தது நீதிமன்றம்.
இந்த 15 பேரில் 12 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் அசாம் மாநிலத்தையும் ஒருவர் உத்தரப் பிரதேசம் மொராதாபாத்தையும் சேர்ந்தவர்கள்.
அயல்நாட்டினர் சட்டம், தொற்று நோய்ச்சட்டம் இரண்டையும் மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் பேசானி இஸ்லாம்பூர் கிராமத்தில் மசூதியில் இவர்கள் தங்கியதை அதிகாரிகளிடம் தெரிவிக்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரல் 1-ம் தேதி இவர்கள் மசூதியில் இருந்ததால் போலீஸார் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து இவர்கள் முதலில் தனிமைப்பிரிவு மையத்துக்கு அனுப்பப்பட்டனர். 14 நாட்கள் தனிமைக்குப் பிறகு திங்களன்று கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றம் இவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.