Last Updated : 04 May, 2020 04:09 PM

 

Published : 04 May 2020 04:09 PM
Last Updated : 04 May 2020 04:09 PM

வெளிமாநிலங்களிலிருந்து வரும் கேரள மக்களுக்காக 6 எல்லைகளைத் திறந்த கேரள அரசு :1.5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு

லாக்டவுன் காரணமாக வெளிமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிக்கியிருந்த கேரள மக்கள் மாநிலத்துள் வருவதற்கா 6 எல்லைகளை திறந்துள்ளது கேரள அரசு.

கேரள அரசின் கேரளாவில் வசிக்காத மலையாளிகள் நலத்துறை அமைச்சகத்திடம் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் 1.50 லட்சம் மலையாள மக்கள் தங்கள் வருகையை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, கேரளாவின் 6 எல்லைகளையும் திறக்க மாநில அரசு நேற்று இரவு உத்தரவி்ட்டுள்ளது

இதன்படி, கேரளாவில் இருக்கும் திருவனந்தபுரம் இஞ்சிவலா சோதனைச்சாவடி, கொல்லம் ஆரியங்காவு சோதனைச்சாவடி இடுக்கியில் குமுளி சோதனைச்சாவடி, பாலக்காட்டில் வாளையார் சோதனைச்சாவடி, வயநாட்டில் முத்தங்கா எல்லை, காசர்கோட்டில் மஞ்சேஸ்வரம் எல்லை ஆகியவற்றை மாநில அரசு திறந்துள்ளது

வெளிமாநிலத்திலிருந்து வரும் கேரள மக்கள் ஒரே நேரத்தில் 500 பேரை பரிசோதிக்கவும், தங்கவைக்கவும் போதுமான ஏற்பாடுகளும், வாகன நிறுத்துமிடங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன மேலும், மாநில அதிகாரிகளுக்கு உதவியாக ஆசரியர்களும், வருவாய், மருத்துவப் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கேரளாவில் வசிக்காத மலையாளிகள் நலத்துறை அமைச்சகத்திடம் தங்கள் வருகையைப் பதிவு செய்தவர்கள் மட்டும் மாநில எல்லைக்குள் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். குழுவாக கேரள மக்கள் வந்தால் அதில் ஒருவர் மட்டும் அதிகாரிகள் ஏற்கெனவே வழங்கிய அனுமதிச்சீட்டை எல்லையில் தர வேண்டும். அதன்பின் அந்த குழுவி்ல் உள்ள ஒவ்வொருவராக பரிசோதிக்கப்பட்டு எல்லைக்குள் அனுமதி்க்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் யாருக்கேனும் கரோனா அறிகுறிகள் இருந்தால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர் சார்ந்திருக்கும் மாவட்டத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், கர்்ப்பிணிகள், லாக்டவுனால் குழந்தைகளைப் பிரிந்தவர்கள், மாணவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் முதியோர், வேலையிழந்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட உள்ளனர்.

கேரள அரசின் கணக்கின்படி கர்நாடக மாநிலத்திலிருந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாகவும்,தமிழகத்திலிருந்து 45,491 பேரும், மகாராஷ்டிராவிலிருந்து 20,896 பேரும் பதிவு செய்துள்ளனர்.

கரோனா அறிகுறிகள் யாருக்கேனும் மாநில எல்ைலக்குள் நுழையும் போது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம் உடல்நலத்துடன் இருந்தாலும், எல்லைக்குள் நுழைந்தபின் ஒருவர் 28 நாட்கள் சுயதனிமைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுவார்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x