தொழிலாளர்களை அனுப்பும் மாநிலம் மொத்த ரயில் கட்டணத்தை செலுத்த வேண்டும், மாநிலங்கள் எப்படி வேண்டுமானாலும் அதை வசூலித்துக் கொள்ளட்டும்: ரயில்வே நிர்வாகம் கைவிரிப்பு

தொழிலாளர்களை அனுப்பும் மாநிலம் மொத்த ரயில் கட்டணத்தை செலுத்த வேண்டும், மாநிலங்கள் எப்படி வேண்டுமானாலும் அதை வசூலித்துக் கொள்ளட்டும்: ரயில்வே நிர்வாகம் கைவிரிப்பு
Updated on
1 min read

புலம் பெயர் தொழிலாளர்களை அனுப்பும் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்களை அனுப்பும் மாநிலங்களே கொடுக்க வேண்டும், அவர்கள் தொழிலாளர்களிடமிருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கலாம், அல்லது இலவசமாகக் கூட அனுப்பலாம் ஆனால் ரயில்வேக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் மாநிலங்களின் மீது பொறுப்பை சுமத்தி தன் கையை விரித்தது.

அனுப்பும் மாநிலமோ, பெறும் மாநிலமோ இந்தச் செலவை ஏற்றுக் கொள்லலாம் அல்லது அனுப்பும் மாநிலம் தொழிலாளர்கள் போய்ச்சேரும் மாநிலத்திடமிருந்து கட்டணத்தை வசூலிக்கலாம், அல்லது தொழிலாளர்களிடம் ரயில் கட்டணங்களை வசூலிக்கலாம், அல்லது வேறு வகையில் இதற்கு நிதி திரட்டிக்கொள்ளலாம் இது அவர்கள் பாடு, ஆனால் ரயில்வேக்கு சம்பந்தப்பட்ட மாநிலம் ரயில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

“வழிகாட்டுதல்களின் படி தொழிலாளர்களை அனுப்பும் மாநிலம் ஒட்டுமொத்த ரயில் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். தொழிலாளர்களை அனுப்பும் மாநிலம் இந்தக் கட்டணங்களை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ரயில் கட்டணங்களை தொழிலாளர்களிடம் வசூலிக்கலாம், பரஸ்பர ஒப்பந்தங்களின் கீழ் தொழிலாளர்கள் சேரும் மாநிலத்திடமிருந்து தொகையைப் பெறலாம். இது அவர்கள் சம்பந்தப்பட்டது” என்று அறிக்கையில் ரயில்வே நிர்வாகம் கைவிரித்து விட்டது.

இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததால் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்குகிறோம். இந்த ரயில்களை இயக்கும் செலவுகளில் 15% தொகையை மாநிலங்களிடமிருந்து வசூலிக்கிறோம். செலவுகளி ரயில்களை கிருமிநாசினி உதவியுடன் சுத்தம் செய்வது, தொழிலாளர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், உணவு, முகக்கவசங்கள் ஆகிய செலவுகள் அடங்கும், மேலும் ரயில்கள் தொழிலாளர்களை இறக்கி விட்டு மீண்டும் காலியாக வரவேண்டும். இதில் 85% செலவை ரயில்வே சுமக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in