

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உள்ளது, இதில் 107 பேர் புனே நகரில் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மரணங்கள், பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் சேர்த்து புனேயில் எண்ணிக்கை 2082 ஆக அதிகரித்துள்ளது.
“நேற்று, ஞாயிறு இரவு முதல் நள்ளிரவு வரை புதிதாக 18 கரோனா தொற்றுக்களும், காலை 9 மணி வரை மேலும் 13 பேருக்கு தொற்று தெரியவர மொத்தம் 31 பேர்களுக்க்கு கரோனா தொற்று புதிதாகப் பரவியுள்ளது” என்று மாவட்ட சுகாதார அதிகாரி பகவான் பவார் தெரிவித்துள்ளார்.
மானில சுகாதார அமைச்சகம் பலி எண்ணிக்கை 106 என்று கூற மாவட்ட நிர்வாகமோ பலி எண்ணிக்கை 111 என்கிறது.
புனே ஜில்லா பரிஷத் தகவல்களின்படி ஞாஹிறு மாலை வரை சிகிச்சையில் உள்ள கரோனா எண்ணிக்கை 1441 ஆக இருந்தது தற்போது 31 அதிகரிப்பைத் தொடர்ந்து 1472 ஆக உயர்ந்துள்ளது.
பிம்ப்ரி-சிஞ்ச்வாத் பகுதியில் கடந்த சனி வரை புதிய தொற்றுக்கள் இல்லாமல் இருந்தது, திடீரென 6 புதிய கேஸ்களினால் கவலை ஏற்பட்டுள்ளது. இதில் 6 பெண்கள், அதிலும் 14 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார்கள்.
21 நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள்:
இந்த புதிய 6 கரோனா பாசிட்டிவ்களுடன் புதிதாக 3 பேருக்கு தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இவர்கள் அத்தியாவசியப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிம்ப்ரி சிஞ்ச்வாத் முனிசிபல் பகுதி 21 நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
புனேயில் 16935 நபர்களின் மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் 14,512 சாம்பிள்கள் நெகெட்டிவ் என்று வந்தது. 1825 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புனே மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 200 புதிய கரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.