தெலங்கானாவில் மேலும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: இ பாஸ் விண்ணப்பிக்கும்படி காவல்துறை அறிவுறுத்தல்

படம்: ஏஎன்ஐ
படம்: ஏஎன்ஐ
Updated on
2 min read

தெலுங்கானாவிலிருந்து 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய சில நாட்களில், மேலும் பல தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பலஇடங்களிலும் மக்கள் ஒன்றாகக் கூடுவதற்கு சிறப்பு ரயில் கோரிக்கை வழிவகுத்தது.

நாடு தழுவிய ஊரடங்கு விதிகள் ஆங்காங்கே தளர்த்தப்பட்டு வரும்நிலையில் கடந்த வெள்ளியன்று இந்திய ரயில்வே தனது முதல் சிறப்பு ரயில் சேவையை தொடங்கியது. தெலுங்கானாவில் உள்ள லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்க்கண்டில் உள்ள ஹதியாவுக்கு 1,200 புலம்பெயர் தொழிலாளர்கள் ஏற்றிக்கொண்டு ரயில்வே தனது முதல் சிறப்பு ரயிலை ரயில்வேத் துறை இயக்கியது.

இதற்கிடையில், ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் இ-பாஸ்கள் சேகரித்திருந்தாலும், அவர்களை தெலுங்கானா-ஆந்திரப் பிரதேச எல்லையில் வெவ்வேறு பகுதிகளில் ஆந்திரப் போலீசார் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டினர்.

பல்வேறு இடங்களில் போராட்டங்கள்

வேறு ஒரு சம்பவத்தில் பெடபள்ளி மாவட்டத்தில் உள்ள ராமகுண்டத்தில், சுமார் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர். வெளியேற விரும்பும் அவர்கள் அந்தந்த மாநிலங்களை அடைய ஏதுவாக 'இ-பாஸ்களுக்கு' விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியபோது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வன்முறை அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் பாதுகாக்கவும், எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் தடுப்பதற்காகவும் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்களை போலீஸார் கலைத்தனர். நாகர்கர்னூல் மாவட்டத்தில் உர்கொண்டாவில் உள்ள ஒரு பருத்தி ஆலையில் பணிபுரியும் சுமார் 600 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதே கோரிக்கையுடன் ரயில்நிலையங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தினர்.

பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் இருப்பதாகவும், அவர்கள் இ-பாஸ்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் போலீஸார் எடுத்துக் கூறியபின்னர் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில், ஹைதராபாத்தில் உள்ள டோலிச்சோவ்கி பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்று கூடி ரயில் நிலையத்தை அடைந்துள்ளனர்'' என்றார்.

இ பாஸ் விண்ணப்பிக்க வேண்டும்

தெலுங்கானாவில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்புவோர் தேவையான தகவல்களை https://tsp.koopid.ai/epass இல் சமர்ப்பிப்பதன் மூலம் இ-பாஸுக்கு விண்ணப்பிக்கலாம் என்று போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் துணை ஆணையர் (மேற்கு மண்டலம்) ஆர் ஆர் சீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலாளர்கள், நகரத்தின் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வதந்திகளைத் தொடர்ந்து திடீரென திரண்டு வந்துள்ளனர்.

நாங்கள் அவர்களின் பெயர்களைச் சேகரித்தோம். மேலும், ரயில்கள் மற்றும் பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போது, நிச்சயமாக தகவல் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறினோம்.

அவர்களுக்கு தொடர்ந்து உணவைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் பொலிசார் அவர்களுக்கு உறுதியளித்தனர், அதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறினர்.

தெலுங்கானாவில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்புவோர் தேவையான தகவல்களை https://tsp.koopid.ai/epass இல் சமர்ப்பிப்பதன் மூலம் இ-பாஸுக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு மேற்கு மண்டல காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

இ பாஸ் செயல்பாடுகள் குறித்து தெலுங்கானா காவல் பணிப்பாளர் நாயகம் (டிஜிபி) எம் மகேந்தர் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், "சரியான சரிபார்ப்புக்குப் பிறகு தங்கள் இ-பாஸ் அனுமதிக்கப்படும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விரைவில் ஈ-பாஸ் பெறுவார்கள். அதிக சுமைகளின் காரணமாக, சில சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன & சேவைகளை சிறப்பாக மீட்டெடுக்கவே எங்கள் குழுக்கள் இயங்கி வருகின்றன. இப் பணிகளில் உள்ள சிக்கல்களை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன், இதற்காக அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in