Published : 03 May 2020 06:38 PM
Last Updated : 03 May 2020 06:38 PM

விமர்சன எதிரொலி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசப் பயணம்- கர்நாடகா அரசு- ரூ.1 கோடி நன்கொடை அளித்த காங்கிரஸ்

மாநிலத்தில் சிக்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப கர்நாடக அரசு பெரிய அளவில் அவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கிறது என்று வெளியான செய்திகளினால் எழுந்த கடும் விமர்சனங்களை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசப் பயணத்தை கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

சொந்த மாவட்டங்களுக்குச் செல்வதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது என்று ஞாயிறன்று அறிவித்துள்ளது.

மெஜஸ்டிக்கில் உள்ள பிஎம்டிசி பேருந்து நிலையத்தில் இந்தச் சேவை ஞாயிறு முதல் செவ்வாய் கிழமை வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கர்நாடகா பிரதேச காங்கிரஸ் கட்சி ஞாயிறன்று கர்நாடகா மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு தொழிலாளர்களை இலவசமாக அனுப்பி வைக்க ரூ. 1 கோடி நன்கொடை அளித்தது.

காங்கிரஸ் கமிட்டி பொறுப்பு தலைவர் டி.கே.சிவக்குமார் கூறும்போது, இந்த நன்கொடை சிக்கிய தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பவே. இதற்காக கூடுதலாக தொகைத் தேவைப்பட்டாலும் தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அதிகக் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த விமர்சனங்களை அடுத்து முதல்வர் எடியூரப்பா இலவசமாக பயணிக்க அனுமதி அளித்தார்.

இதற்கிடையே புவனேஷ்வர் நோக்கி இன்று காலை பெங்களூருவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் 1190 பயணிகளுடன் புறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x