Last Updated : 03 May, 2020 03:18 PM

 

Published : 03 May 2020 03:18 PM
Last Updated : 03 May 2020 03:18 PM

கரோனா வைரஸ் |  நாடு முழுவதும் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான சோதனைகள்: ஐ.சி.எம்.ஆர் தகவல்

கரோனா வைரஸுக்காக இதுவரை நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் (10 லட்சத்திற்கும்) அதிகமான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 39, 980 இந்நோய்க்கு பாதிக்கப்பட்டள்ளதாகவும் 1,301 பேர் பலியாகியுள்ளதாகவும் 10,632 பேர் குணமாகி மீண்டுள்ளார்கள் எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 28,046 பேருக்கு கரோனா வைரஸ் உள்ளதாகவும் அமைச்சகத்தின் இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதன்மையானது பரிசோதனைகள் செய்யப்படுவதாகும். இந்தியாவில் இதுவரை 10 லட்சத்திம் அதிகமான பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள சுகாதார அமைச்சகம் "எங்கள் புள்ளிவிவரங்கள் ஐ.சி.எம்.ஆருடன் பொருந்தி வருகின்றன'' என்று தெரிவித்துள்ளது.

நாட்டின் உச்ச மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான ஐசிஎம்ஆர் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாடெங்கும் கரோனா வைரஸ் நோயைக் கண்டறிவதற்காக 310 அரசு ஆய்வகங்கள் மற்றும் 111 தனியார் ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கோவிட் 19 வைரஸ் பரிசோதனை சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள இந்த ஆய்வகங்களில் மே 3 ஆம் தேதி வரை காலை 10 மணி வரை மொத்தம் 10,46,450 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x