கரோனா ‘லாக்டவுன்: வாரணாசியில் சிக்கிய 22 தமிழர்கள் தம் புதுச்சேரி மாநிலத்திற்கு பேருந்தில் கிளம்பினர்

கரோனா ‘லாக்டவுன்: வாரணாசியில் சிக்கிய 22 தமிழர்கள் தம் புதுச்சேரி மாநிலத்திற்கு பேருந்தில் கிளம்பினர்
Updated on
2 min read

புதுச்சேரியில் இருந்து புனிதயாத்திரையில் வாரணாசி வந்த 22 தமிழர்கள் கரோனாவால் சிக்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று ஒரு பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

உத்திரப்பிரதேசம் வாரணாசிக்கு புதுச்சேரியில் இருந்து கடந்த மாதம் 21 ஆம் தேதி 22 தமிழர்கள் ரயிலில் வந்திருந்தனர். இங்குள்ள புண்ணியத்தலங்களை பார்வையிட்டு விட்டு 29 ஆம் தேதி மீண்டும் ரயிலில் புதுச்சேரி திரும்புவது அவர்கள் திட்டமாக இருந்தது.

அப்போது, கரோனா வைரஸ் பரவலால் முதன்முறையாக தேசிய அளவில் மத்திய அரசு மார்ச் 23 முதல் ‘லாக்டவுன்’ அறிவித்திருந்தது. இதில் விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட அனைத்துவகைப் போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன.

இதனால், வாரணாசியின் கவுடியா மடத்தில் சிக்கியிருந்தவர்கள் பற்றிய தகவல் கடந்த ’இந்து தமிழ் திசை’ இணையத்தில் மார்ச் 26 இல் முதலாவதாக வெளியானது. இதன் தாக்கமாக அவர்களுக்கு அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, மருந்து பொருட்கள் தடையில்லாமல் கிடைத்தன.

புதுச்சேரி மாநில முதல்வர் வி,நாரயணசாமியும் உபி முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர், தம் மாநில மக்களை பத்திரமாகத் திரும்ப அனுப்பு வைக்கும்படியும் உபி முதல்வர் யோகியிடம் வேண்டியிருந்தார்.

இத்துடன் புதுச்சேரிவாசிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக என ரூ.2 லட்சமும் அனுப்பி வைத்திருந்தார். எனினும், அனைவரும் புதுச்சேரிக்கு திரும்ப முயற்சித்து வந்தனர்.

இந்நிலையில், மூன்று தினங்களுக்கு முன் மத்திய அரசு வெளிமாநிலத்தில் சிக்கியவர்கள் தம் வீடு திரும்பலாம் என அறிவித்தது. இதையடுத்து இது குறித்து பேச்சுவார்த்தை

புதுச்சேரியின் ஆட்சியரான அருண்.ஐஏஎஸ், வாரணாசி ஆட்சியரான கவுசல் ராஜ் சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பலனாக, ஒரு பேருந்தில் அனைவரும் நேற்று மதியம் வாரணாசியில் இருந்து புதுச்சேரி கிளம்பினர். இதன் ஆட்சியர் அருண் கோரிக்கையின் பேரில் அனைவருக்கும் முறையான ’லாக்டவுன் பாஸ்’ அனைவருக்கும் உபி அரசு அளித்துள்ளது.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் கடந்த கொண்டிருந்த பேருந்தில் இருந்து வீரபத்திரன் கூறும்போது, ‘வாரணாசியின் உதவி ஆட்சியரான மணிகண்டன்.ஐஏஎஸ் எனும் இளம் தமிழ் அதிகாரி எங்களை நேரில் வந்து பார்த்து மிகவும் உதவினார்.

எங்கள் மாவட்ட ஆட்சியர் அருண்.ஐஏஎஸ் அவ்வப்போது போனில் பேசி உற்சாகம் அளித்து வந்தனர். இதுபோல் பலரது உதவிகளால் எங்கள் வாழ்க்கை பிரச்சனை இன்றி கழிந்தது. எங்கள் முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்து தமிழ் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

வாரணாசியை சேர்ந்த இந்த பேருந்து நாளை இரவு அல்லது மார்ச் 5, செவ்வாய்கிழமை காலை புதுச்சேரி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அறிவித்த பொது விதிமுறைகளின்படி 45 இருக்கைகள் கொண்ட பேருந்தில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in