

கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக முன்கள வீரர்களாக செயல்படும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் மும்படைகளும் சேர்ந்து பல்வேறு நகரங்களில் நன்றி தெரிவிக்கும் வகையில் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி மரியாதை செய்கின்றன
கரோனா போர் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தரைப்படை, விமானப்படை, கப்பல்படை வீர்கள் சேர்ந்து ஈடுபடுவார்கள் என்று தலைமை பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்
அதன்படி டெல்லியில் உள்ள போலீஸ் நினைவரங்கில் இருந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி, அதன்பின் பல்வேறு முக்கிய நகரங்களில் நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படும். போர் விமானங்கள், விமானப்படை விமானங்கள் இன்று காலை 10 மணி அளவில் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி மரியாதை செலுத்த உள்ளன
குறிப்பாக டெல்லி, மும்பை, ஜெய்பூர், அகமதாபாத், குவஹாட்டி, பாட்னா, லக்னோ ஆகிய நகரங்களில் விமானப்படையின் போர்விமானங்களும், ஸ்ரீநகர், சண்டிகர், டெல்லி, ஜெய்பூர், போபால், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் சாதாரண விமானங்களும் பறந்து மரியாதை ெசலுத்த உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுகோய்-30, எம்கேஐ, மிக்-29, ஜாக்குவார் ஆகிய விமானங்கள் டெல்லி ராஜபாதையிலும், டெல்லி சுற்றிலும் காலை 10 மணிமுதல் 30 நிமிடங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி மரியாதை செலுத்த உள்ளன
இதுதவிர சி-130 விமானங்கள் டெல்லி, என்சிஆர் பகுதியில் 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் உயரத்தில் பறந்து மரியாதை செலுத்த உள்ளதாகவும், விமானப்படையின் ஹெலிகாப்டர்கள், கப்பல்படையின் ஹெலிகாப்டர்களும் மருத்துவமனையின் மேலாகப் பறந்து மரியாதை செலுத்தும் என விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
டெல்லி எயம்ஸ் மருத்துவமனை, தீனதயால் மருத்துவமனை, ஜிடிபி, எல்என்ஜேபி, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சப்தர்ஜங், ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை, பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனை, மேக்ஸ் மருத்துவமனை, அப்பல்லோ, ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை ஆகியவற்றின் மீது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்த உள்ளது
பல்ேவறு மருத்துவமனைகள் முன்பாக ராணுவத்தின் இசைக்கருவிகள் வாசிக்கும் பிரிவினர் தேச பக்திப்பாடல்களை இசைத்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதுதவிர கடற்படையின் ஹெலிகாப்டர்கள் தனியாக, டெல்லி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனை, கோவாவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனை, கொச்சியில் உள்ள எர்ணாகுளம் பொது மரத்துவ்மனை, விசாகப்பட்டிணத்தில் உள்ள அரசு மருத்துவமனை, போர்ட் பிளேரில் உள்ள ஜிபி பிளாண்ட் மருத்துவமனையில் மீது மலர்கள் தூவி மரியாதை செலுத்துகின்றன
மும்பையில் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இன்று இரவு 7.30 மணி முதல் 11.59 மணி முதல் 5 கப்பற்படை கப்பல்கள் வந்து மரியாதை செலுத்துகின்றன. கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு வரும் 5 கப்பல்களும் சத்தமாக ஒலி எழுப்பி கரோனா வீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றன. விசாகப்பட்டிணம் கடற்ப்பகுதியிலும் இரு கடற்படை கப்பல்களும் இரவு மரியாதை செலுத்த உள்ளன
மேலும், சண்டிகர், லே, டேராடூன், காந்திகநகர்,மும்பை, ஜெய்பூர், வாரணசி, பாட்னா, லக்னோ, போபால் ராஞ்சி, ராய்பூர், இட்டாநகர், ஷில்லாங் ஆகிய நகரங்களிலும் போர் விமானங்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்துகின்றன.
கடற்படை சார்பில் போர்பந்தர், ஓகா, ரத்னகிரி, தஹானு, முருத், கோவா, மங்களூரு, கவரட்டி, காரைக்கால், சென்னை, கிருஷ்ணாபட்டினம், நிஜாம்பட்டிணம், புதுச்சேரி,காக்கிநாடா, பாரதீப், சாகர் தீவு, போர் பிளேர், திக்லிபூர், மாயாபந்தர் உள்ளிட்ட 24 நகரங்களில் மரியாைத செலுத்தப்பட உள்ளது