

லாக்டவுன் தேச அளவில் மே மாதம் 17ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்றுஇல்லாத பச்சை மற்றும் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் அத்தியாவசியம் இல்லாத மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மின் வணிகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிகப்பு மண்டலங்களில் அத்தியாவசிய பொருட்கள் டெல்விரி மட்டுமே மின் வணிகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கூடுதல் தளர்வாக ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பார்பர் ஷாப், சலூன்கள் திறக்க கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுபானக்கடைகள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக மற்ற இடங்களில் திறக்கலாம். நகரங்களில் மார்கெட் வளாகங்களில், மால்களில் இல்லாத மதுபானக்கடைகள் திறக்கலாம்.
வீட்டு பணியாட்கள், மின்சார ஊழியர்கள், பிளம்பர்கள், மற்றும் பிறர் வருவதற்கு குடியிருப்போர் நல சங்கம் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் கரோனா தடுப்புக்கான அடிப்படை நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது அவசியம்.
“இதில் ஏதாவது தவறு நடந்தால் வரச்சொன்னவர்கள்தான் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்”, என்று உள்துறை அதிகாரி ஒருவர் எச்சரிக்கிறார்..
ஆரஞ்சு மண்டலங்களில் கூட பேருந்து இயக்கங்களுக்கு அனுமதி இல்லை.. ஆரஞ்சு மண்டலங்களில் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார் கார் உள்ளிட்ட போக்குவரத்து அனுமதி உண்டு ஆனால் 3 பேருக்கும் மேல் பயணிக்க அனுமதி இல்லை. வாடகை டாக்ஸி, மற்றும் கேப்களுக்கும் இதே நிபந்தனையில் அனுமதி உண்டு.