Last Updated : 03 May, 2020 08:34 AM

 

Published : 03 May 2020 08:34 AM
Last Updated : 03 May 2020 08:34 AM

முன்னாள் நீதிபதி: ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் உறுப்பினர் கரோனா வைரஸால் உயிரிழந்தார்

முன்னாள் நீதிபதியும், லோல்பாக் அமைப்பில் உள்ள 3 உறுப்பினர்களில் ஒருவரான அஜய் குமார் திரிபாதி கரோனா வைரஸால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வந்த அஜய் குமார் திரிபாதிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலில் மொத்தம் 3 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதி்ல் முன்னாள் நீதிபதி அஜய் குமார் திரிபாதியும் இடம் பெற்றிருந்தார். கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, திரிபாதிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முன்னாள் நீதிபதி திரிபாதி: கோப்புப்படம்

முன்னாள் நீதிபதி திரிபாதி கடந்த 2019, மார்ச் மாதம் லோக்பால் அமைப்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை தலைமை நீதிபதியாக இருந்தார், மேலும், பிஹார் மாநில அரசின் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றினர். அதன்பின் 2006-ல் பிஹார் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக திரிபாதி நியமிக்கப்பட்டார். அதன்பின் 2011-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் நிரந்தரநீதிபதியாக திரிபாதியை கொலிஜியம் குழு நியமித்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா வைரஸிஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற முதல் நோயாளி திரிபாதிதான். ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சையளித்தும் அவர் இறக்கும்வரை அவருக்கு கரோனா பாஸிட்டிவாகத்தான் இருந்தது என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

லோக்பால் உறுப்பினர் திரிபாதி மறைவுக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டவிர் அவர் பதிட்டுள்ள இரங்கல் செய்தியில் “
முன்னாள் நீதிபதியும் லோக்பால் உறுப்பினரான ஏ.கே.திரிபாதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். பாட்னா உயர் நீதிமன்றம், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சிறப்பாகப் பணியாற்றியவர் அவரை இழந்து வாடும் அவரின் மனைவி அல்கா திரிபாதி அவரின் குடும்பத்தாருக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x