

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி உஸ்மான் கானை 14 நாள் காவலில் விசாரிக்க, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உதம்பூரில் கடந்த சில நாட் களுக்கு முன் நடைபெற்ற தீவிர வாத தாக்குதலில் இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு தீவிரவாதி உஸ்மான் கான் உயிருடன் பிடிபட்டார்.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி யான உஸ்மான், பலத்த பாதுகாப் புடன் ஜம்மு அழைத்து வரப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத் தப்பட்டார். தீவிரவாதிகள் உஸ்மானை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என பாதுகாப்பு படை யினர் அஞ்சியதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அவரிடம் பல்வேறு தளங் களில் விசாரணை நடத்தவேண்டி யிருப்பதால், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து அவரை 14 நாள் காவலில் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
உஸ்மான் மீது தேசத்தின் மீது போர் தொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக 11 பேரை பிடித்து என்ஐஏ மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை விசாரித்து வருகிறது.
உஸ்மான் மற்றும் கொல்லப்பட்ட மற்றொரு தீவிரவாதி முகமது நோமன் ஆகிய இருவரையும் உதம்பூருக்கு அழைத்து வந்த வேன் ஓட்டுநர், நாவேத்திடம் ரூ.5 லட்சம் கொடுத்த வியாபாரி ஆகியோரை தேடும் பணி நடந்து வருகிறது.