

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு லாக்-டவுன் நடைமுறைகள் மே 4ம் தேதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தற்போதைய நிலவரங்களின் படி கரோனா பலி எண்ணிக்கை 1,223 ஆக அதிகரித்துள்ளது, பாதிப்பு எண்ணிக்கை 37,776 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரே நாளில் 71 மரணங்கள் நிகழ்ந்துள்ளன கரோனா கேஸ்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 2,411 ஆக உயர்ந்துள்ளது
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியிருப்பதாவது:
கோவிட்-19 சிகிச்சையில் உள்ள வைரஸ் தொற்று எண்ணிக்கை 26,565 ஆக உள்ளது, 10 ஆயிரத்து 17 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 26.52% நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்த கரோனா தொற்று எண்ணிக்கையில் 111 பேர் அயல்நாட்டினர்.
வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து தற்பபோது வரை கரோனாவுக்கு 71 பேர் மரணமடைந்துள்ளனர். மகாராஷ்ட்ராவில் 26, குஜராத்தில் 22, மத்தியப் பிரதேசத்தில் 8, ராஜஸ்தானில் 4, கர்நாடகாவில் 3, டெல்லி, உத்தர்ப்பிரதேசத்தில் தலா 2 பேர், பிஹார், ஹரியாணா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
மொத்தமாக கரோனாவுக்கு இறந்தவர்களில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 485 மரணங்கள், குஜராத்தில் 236 , ம.பி.இயில் 145, ராஜஸ்தானில் 62, டெல்லியில் 61, உ.பி.யில் 43, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் முறையே 33 பேர் மரணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது, தெலங்கானாவில் 26, கர்நாடகாவில் 25 பேர் மரணமடைந்துள்ளனர்.
பஞ்சாபில் இதுவரை 20 பேரும், ஜம்மு காஷ்மீரி 8 பேரும், கேரளா மற்றும் ஹரியாணாவில் முறையே 4 மரணங்களும், ஜார்கண்ட், பிஹாரில் முறையே 3 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
மேகாலயா, இமாச்சல், ஒடிஷா, அசாம் ஆகிய மாநிலங்களில் முறையே ஒருவர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
இன்று மாலை வரையிலான தரவுகளில் மகாராஷ்ட்ராவில் மொத்தம் 11,506 பேர் அதிகபட்சமாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுளளனர். குஜராத்தில் அடுத்தபடியாக 4721 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்லது. டெல்லி 3378, ம.பி. 2,719, ராஜஸ்தான் 2,666, தமிழ்நாடு 2,526, உ.பி. 2,455 என்ற எண்ணிக்கைகளில் கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ள நிலையில் தெலங்கானாவில் 1,057 ஆக உள்ளது. மேற்கு வங்கத்தில் 795 ஆக அதிகரித்துள்ள நிலையில், பஞ்சாபில் 772, ஜம்மு காஷ்மீரில் 639, கர்நாடகாவில் 598, கேரளாவில் 498, பிஹாரில் 471 என்று கரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை உள்ளது.
ஹரியாணாவில் 360 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் 153, ஜார்கண்டில் 111 மற்றும் சண்டிகரில் 88 என்று கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உத்தராகண்ட்டில் 58, அஸாம், சத்தீற்கரில் முறையே 43 கேஸ்கள், இமாச்சலத்தில் 40 கேஸ்கள் இதுரவை பதிவாகியுள்ளன.
அந்தமான் நிகோபார் தீவுகளில் 33, லடாக்கில் 22, மேகாலயாவில் 12, புதுச்சேரியில் 8, கோவாவில் 7, மணிப்பூர், திரிபுராவில் முறையே 2 , மிஜோரம் மற்றும் அருணாச்சலத்தில் முறையே ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்கள் எண்ணிக்கைகள் ஐசிஎம்ஆர் எண்ணிக்கைகளுடன் ஒத்துப் போகின்றன, 179 கேஸ்களின் கரோனா தொடர்புத்தடம் காண மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.