Published : 02 May 2020 06:50 PM
Last Updated : 02 May 2020 06:50 PM

கரோனா ஊரடங்கு; ஆரஞ்சு மண்டலங்களில் வாகனங்கள் இயக்குவது தொடர்பாக மத்திய அரசு புதிய விளக்கம்

மே 4, 2020 முதல் நடைமுறைக்கு வரும் இரண்டு வார ஊரடங்கின் போது, ஆரஞ்சு மண்டலங்களில் மக்கள் மற்றும் வாகனங்களின் இயக்கம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரோனா நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகு, மே 4, 2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க, நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

இதிஙல் ஆரஞ்சு மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த சில விளக்கங்களை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஆரஞ்சு மண்டலங்களில் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் குறித்த குழப்பத்தை நீக்குவதற்காக இதுபற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

அதன்படி, ஆரஞ்சு மண்டலங்களில், நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, மாவட்டங்களுக்கிடையிலும், உள்-மாவட்டப் பகுதிகளிலும் பேருந்துகளை இயக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன:

ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே கொண்டு டாக்சிகள் இயங்க அனுமதிக்கப்படும்.

தனிநபர்கள் மற்றும் வாகனங்களை குறிப்பிட்ட முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே, மாவட்டங்களுக்கு இடையே இயக்க அனுமதிக்கப்படுகிறது, நான்கு சக்கர வாகனங்களில் அதிகபட்சமாக இரண்டு பயணிகள் மற்றும் ஒரு ஓட்டுநர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

இதர அனைத்து நடவடிக்கைகளும் ஆரஞ்சு மண்டலங்களில், எந்தத் தடையும் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அவற்றின் அவசியத் தேவை மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில், குறைந்த எண்ணிக்கையிலான செயல்பாடுகளை அனுமதிப்பது பற்றி முடிவு செய்யலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x