Published : 31 Aug 2015 05:20 PM
Last Updated : 31 Aug 2015 05:20 PM

பயங்கரவாத குற்றங்கள் நீங்கலாக மரண தண்டனையை ரத்து செய்ய சட்ட ஆணையம் பரிந்துரை

பயங்கரவாதம், நாட்டுக்கு எதிராக போர் ஆகிய குற்றங்கள் நீங்கலாக, பிற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ரத்து செய்யலாம் என்று சட்ட ஆணையம் பரிந்துரை மேற்கொண்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா இன்று (திங்கள்கிழமை) இதற்கான அறிக்கையை சமர்ப்பித்தார்.

மூன்று சட்ட ஆணைய உறுப்பினர்கள் (இதில் 2 அரசுப் பிரதிநிதிகளும் அடங்குவர்) மரண தண்டனையை ரத்து செய்யக்க் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், ஏனைய 6 உறுப்பினர்கள் பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பரிந்துரையின்
முக்கிய அம்சங்கள்:

> பயங்கரவாத குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது பற்றி நாடாளுமன்ற விவாதம் தேவை. இதில் மரண தண்டனை ரத்துக்கு சட்ட ஆணையம் உடனடியான பரிந்துரையை மேற்கொள்ளவில்லை.

> மரண தண்டனை குற்றங்களை தடுக்கக்கூடியவை என்பது ஒரு கற்பனை, குற்றத்துக்கு ஈடாக சரியான தண்டனை என்ற நீதி பழிக்குப் பழி நடவடிக்கையாக இருக்கக் கூடாது என்று மரண தண்டனை குறித்து சட்ட ஆணையம் கவனத்தில் கொள்கிறது.

> (மரண தண்டனையில்) 'அரிதினும் அரிதான' என்ற கொள்கை முரண்பாடுடன் கூடிய தன்னிச்சைத் தன்மையிலிருந்து விடுபட்டது அல்ல. மேலும் அரசியல் சாசன ரீதியாக தக்கவைக்கக் கூடியதுமல்ல.

முன்னதாக, உலகில் மரண தண்டனை நடைமுறையில் உள்ள 59 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதை ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி ஆராயும்படி நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான சட்டக் கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷன் வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது.

அதில், தீவிரவாதம் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கலாம், இதர குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 270 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை உறுப்பினர்களின் பார்வைக்காக அனுப்பப்பட்டது.

மரண தண்டனை நடைமுறையில் இருக்கவேண்டும் என 1962-ல் சட்ட கமிஷன் பரிந்துரைத்தது. இப்போது கமிஷன் தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. சட்டக் கமிஷனின் அறிக்கையை அதன் தலைவர் நீதிபதி ஏ.பி.ஷா மத்திய அரசிடம் தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x