Published : 02 May 2020 04:05 PM
Last Updated : 02 May 2020 04:05 PM

ஊரடங்கை பயன்படுத்திக் கொள்ளும் ரயில்வே: நீண்டகாலம் கிடப்பில் இருந்த பணிகள் வேகமாக முடிப்பு

புதுடெல்லி

கரோனா ஊரடங்கு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு பணிகள், பாலங்கள், ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை முதல்கட்ட பொதுமுடக்கமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-வது கட்ட பொதுமுடக்கத்தையும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டாலும், நோயாளிகள் எண்ணிக்கை குறையவில்லை. இதனால் 3-ம்கட்ட ஊரடங்கை 17-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து நேற்று அறிவித்தது. இதையடுத்து அந்த தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் சேவையில்லாததால் பணியாளர்களை பயன்படுத்தி நீண்டகாலம் நிலுவையில் உள்ள பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
சீரமைப்பு பணிகள், பாலங்கள், ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

ரயில்வேயில் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், நிலுவையில் உள்ள பாலங்கள், ரயில் பாதைகள் சீரமைப்புப் பணிகள் மற்றும் பணிமனை மாற்றி அமைப்பு உள்ளிட்ட பணிகளில் முடக்கநிலை அமல் காலத்தில் ரயில்வேயின் பின்களப் பணியாளர்கள் தீவிரம்

பணிமனைகளை மாற்றி அமைத்தல், குறுக்காகக் கடந்து செல்லும் பாதையைப் புதுப்பித்தல், பாலங்களில் பழுதுநீக்கம் போன்ற பணிகளை முடக்கநிலை காலத்தில் இந்திய ரயில்வே துறையின் பின்களப் பணியாளர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இந்தப் பணிகள் நீண்டகாலமாக நிலுவையில் இருந்ததால், ரயில்வே பணிகளுக்கு தடங்கல்கள் இருந்து வந்தன.

பார்சல் ரயில்கள், சரக்கு ரயில்களை இயக்கியதன் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் வழங்கல் சங்கிலித் தொடர்புகளை இந்திய ரயில்வே உறுதி செய்து கொடுத்துள்ளது. கோவிட் -19 நோய்த் தொற்று காரணமாக முடக்கநிலை அமலில் இருப்பதால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பராமரிப்புப் பணிகளையும் ரயில்வேசெய்து முடித்துள்ளது.

12270 கிலோ மீட்டர் நீளத்துக்கான சமவெளிப் பகுதி ரயில் பாதைகள் மற்றும் 5263 டர்ன் அவுட்களில் நிலுவையில் இருந்த பராமரிப்புப் பணிகளை முடிக்க, ரயில் பாதை பராமரிப்புக்கான கனரக இயந்திரங்கள், சிக்னல் சாதனப் பராமரிப்பாளர்கள் என சுமார் 500 நவீன இயந்திரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. இவை மூலம் சுமார் 10749 இயந்திர வேலை நாட்களுக்கு ஈடான வேலைகள் செய்து முடிக்கப் பட்டுள்ளன.

முக்கியமான சில ரயில் பாதைப் பணிகள்:

i. காஜிப்பேட்டை ரயில்வே பணிமனையில் (தெற்கு மத்திய ரயில்வே) மரத்தாலான குறுக்காகக் கடக்கும் பாதையை, கான்கிரீட் லே அவுட்டாக புதுப்பித்தது.

ii. விஜயவாடா பணிமனையில் குறுக்காகக் கடக்கும் பாதையை கான்கிரீட் லேஅவுட் கொண்டதாகப் புதுப்பித்தது (தெற்கு மத்திய ரயில்வே).

iii. பரோடா ரயில் நிலையத்தில் (மேற்கு ரயில்வே) 1 மற்றும் 2வது லைன்களில் சிமென்ட் கான்கிரீட் காப்புத் தளம் பழுதுநீக்கம்.

iv. பெங்களூரு சிட்டி பணிமனையில் மாற்றி அமைக்கும் பணிகள் (தென் மேற்கு ரயில்வே)

முக்கியமான பாலங்களின் பணிகள்:

i. சிவமோகா நகர் (தென் மேற்கு ரயில்வே) அருகே டுங்கா ஆற்றின் மீதுள்ள எண் 86 பாலத்தில் இரும்பு தாங்குதளம் மாற்றுதல்

ii. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே (தெற்கு ரயில்வே) சாலையின் மீதாகச் செல்லும் பாலத்தை அகற்றுதல்

iii. கிழக்குக் கடலோர ரயில்வேயில், அலுவலரால் இயக்கப்படும் எண் 493வது ரயில்வே கேட்டுக்குப் பதிலாக 4.65x5.15 மீட்டர் அளவுள்ள சுரங்கப் பாதைக்கு இரட்டை சுரங்க அமைப்பு நுழைக்கும் பணி.

iv. ராஜமுந்திரி - விசாகப்பட்டினம் பிரிவில் (தெற்கு மத்திய ரயில்வே) 4 x 5.5 மீட்டர் பாதைக்கு இணைப்புத் தரப் பாலம் கட்டும் பணி.

v. தென் மத்திய ரயில்வேயில் பாலம் எண் 525 இடத்தில் சுரங்கம் நுழைவுப் பணி.

vi. பூசவல் கோட்டத்தில் (மத்திய ரயில்வே) 6 நடை மேம்பாலங்கள் அமைக்கும் பணி.

vii. லூதியானா ரயில் நிலையத்தில் (வடக்கு ரயில்வே) உபயோகத்தில் இல்லாத பழைய இரட்டை மேம்பாலங்களை அகற்றும் பணி.

viii. கிழக்கு மத்திய ரயில்வேயில் கால்வாய் பணிக்காக சர்வீஸ் தாங்கு தளம் அமைத்தல்.

ix. கிழக்கு ரயில்வேயில் டல்லா நடைமேம்பாலத்தை அகற்றுதல்

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x