Last Updated : 02 May, 2020 09:01 AM

 

Published : 02 May 2020 09:01 AM
Last Updated : 02 May 2020 09:01 AM

3-ம் கட்ட லாக்டவுன்: பச்சை, சிவப்பு மண்டலத்தில் கார்கள், இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி உண்டா? புதிய விதிகள் சொல்வது என்ன?

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவும் வேகம் கட்டுக்குள் வராததையடுத்து, 3-ம் கட்ட லாக்டவுனை மே 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மத்திய அரசு நீ்ட்டித்துள்ளது. இதில் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் கார்கள், இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி உண்டா என்பது குறித்து புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை முதல்கட்ட பொதுமுடக்கமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ம் தேதிமுதல் மே 3-ம் தேதிவரை 2-வது கட்ட பொதுமுடக்கத்தையும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால் கரோனா வைரஸ் பரவும் வேகம்கட்டுப்படுத்தப்பட்டாலும், நோயாளிகள் எண்ணிக்கை குறையவில்லை, இதனால் மே 4-ம் தேதி முதல் 17-ம் ேததி வரை 3-ம் கட்ட பொதுமுடக்கத்தை மத்திய அரசு நேற்று நீ்ட்டித்து அறிவித்தது. ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட இரு பொதுமுடக்கத்தால் கரோனா பாதித்த மாவட்டங்களில் முன்னேற்றம் தென்பட்டது.

இதன்படி கரோனா பாதிப்பு அதிகமாக 130 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அது சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுமாரான பாதிப்பு இருப்பதாக 284 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அதுஆரஞ்சு மண்டலங்களாகவும், கடந்த 21 நாட்களாக கரோனா நோயாளிகள் இல்லாத 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த மூன்று மண்டலங்களில் கார்கள், இரு சக்கர வாகனங்கள், பஸ்போக்குவரத்து இயக்கப்படலாமா என்பது குறி்த்து மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அது குறித்த விவரம் வருமாறு

பச்சை மண்டலத்தில் கார் ஓட்டுநர் உள்பட 3 பேர் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு மண்டலத்தில் டாக்ஸி, கேப்கள் போன்றவற்றில் ஓட்டுநருடன் இரு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு மண்டலத்தில் மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே தனிநபர்கள், வாகனங்கள் இயக்கம் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டுஇருசக்கர வாகனங்களில் 2 பேர் பயணிக்க அனுமதி உண்டு.

சிவப்பு மண்டலத்தில் காரில் அதிகபட்சமாக ஓட்டுநரைச் சேர்ந்து இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி உண்டு, இரு சக்கர வாகனத்தில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பச்சை மண்டலத்தில் பேருந்துகள் அனைத்தும் 50 சதவீதம் பயணிகளுடன் மட்டும் இயக்க அனுமதிக்கப்படும். அதாவது பஸ்ஸில் 60 பயணிகள் அமர இடம் இருந்தால் அதில் 30 பேர் மட்டுமே அமரவைத்து பஸ் இயக்கப்பட வேண்டும். பேருந்து பணி மனைகளில் 50 சதவீதம் ஊழியர்களை வைத்து இயக்க அனுமதி உண்டு

அனைத்து சரக்குப் போக்குவரத்துக்கும் அனுமதி உண்டு. அண்டைநாடுகளுடனான ஒப்பந்தங்களின் கீழ் வரும் சரக்குப் போக்குவரத்துகளை எந்த ஒரு மாநிலமோ,யூனியன் பிரதேசங்களோ தடுக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x