

கரோனா வைரஸைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள லாக்டவுனால் சொந்த ஊர்களுக்க செல்ல முடியாமல் சிக்கி இருக்கும் மாணவர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள் ஆகியோரின் நலனுக்காக போர்ட் பிளேர் சென்னை இடையே சிறப்பு கப்பல்களை இயக்க அந்தமான் நிகோபர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது
புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப போக்குவரத்து வசதிகளை செய்ய புதன்கிழமை மத்திய அரசுஅனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து அந்தமான் நிகோபர் நிர்வாகம் கப்பல் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்தமான் கப்பல் சேவை துணை இயக்குநர் விடுத்த அறிக்கையில், “ கப்பல் போக்குவரத்து என்பது ஒரு முறை செல்வதற்கு மட்டும் தான்.அதாவது போர்ட்பிளேரிலிருந்து சென்னைக்குச் செல்லவும், சென்னையிலிருந்து போர்ட் பிளேருக்கு மட்டுமே கப்பல் இயக்கப்படும். லாக்டவுனால் சிக்கியிருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவே இந்த கப்பல்கள் இயக்கப்டுகிறது.
சென்னையில்இருந்து போர்ட் பிளேருக்கு வரும் மக்கள் கண்டிப்பாக 14 நாட்கள் சுயதனிமைக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் கப்பல் ஏறும் முன் அனைவருக்கும் கண்டிப்பாக மருத்துவப்பரிசோதனை முடித்தபின்பே அனுமதிக்கப்படும்.
கப்பல் பயணத்தில் செல்ல விரும்புவோர் நாளை(மே2-ம் தேதி)மாலை 5 மணிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். போர்ட்பிளேருக்கு செல்ல காத்திருப்போர், சென்னைக்குச் செல்லக் காத்திருப்போர் எண்ணிக்கையின் அடிப்படையில் கப்பல் இயக்கப்படும்.
போர்ட் பிளேரலிருந்து சென்னைக்கு செல்ல விரும்புவோர் என்ற 9932080480 ,9150572319 எண்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக பெயர், வயது, பாலினம், தற்போது இருக்கும்இடம், செல்லும் இடம், செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
சென்னையிலிருந்து போர்ட்பிளருக்கு செல்ல விரும்பும் மக்கள் ெசன்னையில் உள்ள கப்பல் சேவை துணைஇயக்குநரிடம் 9434272187 என்ற எண்ணில் எஸ்எம்எஸ்மூலம் பதிவு செய்ய வேண்டும் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது