Published : 01 May 2020 08:41 AM
Last Updated : 01 May 2020 08:41 AM

கரோனா பிரச்சினையை திறம்பட கையாளுவதால் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்கிறது

கரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட கையாளுவதால் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனம், ‘மார்னிங் கன்சல்ட்'. இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ஜப்பான், பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கரோனாவைரஸை எவ்வாறு கையாளுகின்றனர், அவர்களுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது குறித்து இந்நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி83% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தைப் பிடித்தார். மெக்சிகோ அதிபர்லோபஸ் ஒபரடோர் 65% ஆதரவுடன் 2-வது இடத்தையும், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 60 % ஆதரவுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோனுக்கு 9-வது இடமும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு 10-வது இடமும் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து அண்மையில் நாடு முழுவதும் மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தியபோது பிரதமர் நரேந்திர மோடிக்கு 76.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். அதன்பின் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தபோது பிரதமர் மோடியின் மக்கள் ஆதரவு 93.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோராகுவின் நல்ல பலன் அளிக்கிறது என்றுமருத்துவர்களில் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த மருந்துக்கு உல கம் முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்ஸி குளோராகுவின் மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பிரதமர்நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

சர்வதேச அமைதி என்ற அமைப்பின் தெற்காசிய திட்ட இயக்குநர் மிலன் வைஷ்ணவ் கூறும்போது, “இக்கட்டான நேரத்தில் பிரதமர் மோடி திறம்பட செயல்பட்டு தனதுசெல்வாக்கை நிலை நிறுத்தியுள்ளார்” என்றார்.

உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் கரோனா வைரஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளன. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோராகுவின் மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவிலும் பிரதமர்
மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x