வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்ததால்தான் நிறைய நோயாளிகளைக் கண்டறிய முடிந்தது: பிஹார் அமைச்சர் தகவல்

பிஹார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே.
பிஹார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே.
Updated on
1 min read

வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்ததால்தான் கரோனா நோயாளிகள் நிறைய பேர் இருப்பதைக் கண்டறிய முடிந்தது என்று பிஹார் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் புதிதாக 9 பேருக்கு கரோனா பாதித்துள்ள நிலையில், மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 392 ஆக அதிகாரித்துள்ளது. இதில் 65 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது பிஹாரில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும் இந்த எண்ணிக்கை கூட வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து பார்த்ததால்தான் தெரியவந்தது என்று பிஹார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் வீட்டுக்கு வீடு கரோனா பரிசோதனைகளை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறிதது பிஹார் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

''பிஹாரில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களைக் கண்டறிய மாநில சுகாதாரத்துறை துறை வீடு வீடாகச் சென்றது. இது ஆரம்பத்தில் கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோயாளிகளை அடையாளம் காண வழிவகுத்தது. மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் வீட்டுக்கு வீடு பரிசோதனைகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இது போதாது. வீடு வீடாகச் சென்றதால்தான் நிறைய கரோனா நோயாளிகள் இருப்பதைக் கண்டறிய முடிந்தது. பிஹார் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களைப் பரிசோதனை செய்வதற்காக வீட்டுக்கு வீடு செல்லத் திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் முழுமையடையும்.

வீட்டுக்கு வீடு பரிசோதனை செய்யும் பணிகள் மே 1 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தொடங்கும்''.

இவ்வாறு மங்கல் பாண்டேதெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in