

பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு லாக் டவுன் காலக்கட்டத்தில் முழுச்சம்பளத்துடன் சிறப்பு விடுப்பு அளிக்கப்படுகிறது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் வியாழனன்று அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வேலைக்கு வராத மாற்றுத் திறனாளிகளின் விடுப்பை ‘சிக் லீவ்’ என்று வகைப்படுத்தியதையடுத்து மத்திய அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியக் கூட்டமைப்பு இந்த விவகாரத்தை சமூக நீதி அமைச்சகத்திடம் கொண்டு செல்ல இந்த அமைச்சகம் நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறையிடம் கொண்டு சென்றது.
“லாக்டவுன் காலக்கட்டத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களின் விடுப்பை சிக் லீவ் என்பதாக கணக்கிடுவது சரியாகாது” என்று சமூக நீதி அமைச்சகம் நிதிச்சேவைகள் துறைக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து மத்திய நிதிச்சேவைகள் துறை பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பிய அறிவிக்கையில் மாற்றுத்திறனாளிகளின் விடுப்பை சிறப்பு விடுப்பாகக் கருத வேண்டும் என்று தெளிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் ‘லாஸ் ஆஃப் பே’ என்பதிலிருந்து தப்பியுள்ளனர்.