Last Updated : 30 Apr, 2020 03:49 PM

 

Published : 30 Apr 2020 03:49 PM
Last Updated : 30 Apr 2020 03:49 PM

புலம்பெயர்ந்தோர் ஊர் திரும்புவதற்கு மத்திய அரசு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை

புலம்பெயர்ந்தோர் பத்திரமாக வீடு திரும்புவதற்கு மத்திய அரசு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

லாக்டவுனில் சிக்கிய புலம் தொழிலாளர், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் சொந்த இடங்களுக்கு நிபந்தனைகளுடன் செல்லலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 27 அன்றே, ராஜஸ்தான் முதல்வர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ''லாக்டவுன் காரணமாக பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் ராஜஸ்தானின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள். சொந்த இடங்களுக்கு வந்து சேரும் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் அந்தந்தப் பகுதி மக்கள் வழங்க வேண்டும்'' எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

உள்துறை அமைச்சகத்தின் புதிய உத்தரவை வரவேற்றுள்ள கெலாட் இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் குடியேறியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவை வரவேற்கிறேன்.

மத்திய அமைச்சரின் உத்தரவுப்படி மாநில அரசுகள் செய்யவேண்டிய ஏற்பாட்டுப் பணிகளில் ராஜஸ்தான் முன்னணியில் உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அல்லது திரும்பி வர விரும்புவோரின் ஆன்லைன் பதிவுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். புதன்கிழமை வரை, சுமார் 6 லட்சம்த்து 35 ஆயிரம் புலம்பெயர்ந்தோர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இத்தருணத்தில், மத்திய அரசு புலம்பெயர்ந்தோர் வீடு திரும்புவதற்கு மத்திய அரசு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தங்களுக்கு வைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x