Published : 30 Apr 2020 08:49 AM
Last Updated : 30 Apr 2020 08:49 AM

மணமகன் கேரளாவில்... மணமகள் உ.பி.யில்... 2,500 கி.மீ. இடைவெளியில் நடைபெற்ற புதுமை திருமணம்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் நடேசன் (30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சனா (28) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அஞ்சனா, உத்தரபிரதேசத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களின் திருமணம் ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்தது. எனினும் சில காரணங்களால் ஏப்ரல் 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மணப்பெண் அஞ்சனாவால் திருமணம்நிச்சயிக்கப்பட்ட தேதியில் கேரளாவுக்கு செல்ல முடியவில்லை. இதனால் சிறிது ஏமாற்றமடைந்த இரு வீட்டாரும், பின்னர் யோசித்து புதுமையான முடிவுக்கு வந்தனர். அதாவது, செல்போன் வீடியோ அழைப்பு (video call) மூலமாகவே திருமணத்தை நடத்த தீர்மானித்தனர்.

அதன்படி, கேரளாவில் இருந்த மணமகன் ஸ்ரீஜித் நடேசன், சுமார் 2,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்தரபிரதேசத்தில் மணக்கோலத்தில் இருந்த மணமகள் அஞ்சனாவுக்கு மங்கள இசை பின்னணியில் செல்போனில் தாலி கட்டினார். அப்போது மணமகள் தனக்குதானே தாலியை கட்டிக் கொண்டார்.

இந்த திருமண வீடியோ காட்சிநேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஊரடங்கையும் மதித்து, அதேநேரத்தில் சமூக இடைவெளியையும் கடைப்பிடித்து நடைபெற்ற இந்த புதுமை திருமணத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x