Published : 29 Apr 2020 01:33 PM
Last Updated : 29 Apr 2020 01:33 PM

‘‘சிதம்பரத்திடம் ராகுல் காந்தி டியூஷன் கற்க வேண்டும்’’- ஜவடேகர் கிண்டல்

புதுடெல்லி

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்திடம் ராகுல் காந்தி டியூஷன் கற்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டல் செய்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே தாக்கல் செய்த மனுவில், பிப்ரவரி 16-ம் தேதி வரை கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். அதில் ரூ.68 ஆயிரம் கோடி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி வேண்டுமென்றே கடனைத் திருப்பி அளிக்காதவர்களின் கடன்கள் தள்ளுபடியா என்று கேட்டும் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை மக்களவையில் வெளியிடாமல் மறைத்தது பாஜக என்றும், காரணம் இது அவர்களின் நண்பர்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பதிலளித்து இருந்தனர். அவர் கூறுகையில் ‘‘ இது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதானே தவிர இது அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் நடைமுறையை கைவிடுவதாக அர்த்தமாகாது என்று விளக்கினார்.

இந்தநிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘கடன் தள்ளுபடி என்பது வேறு, வாரக் கடனை கழித்து விட்டு கணக்கு வைத்திருப்பது என்பது வேறு. இது வங்கிகளின் வழக்கமான நடைமுறை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வந்து சேராத கடன்களை கணக்குபடி தனித்து வைப்பது என்பது வங்கி நடைமுறை. இதை பற்றியெல்லாம் ராகுல் காந்திக்கு எப்படி தெரியும். முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்திடம் ராகுல் காந்தி டியூஷன் கற்க வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x