Last Updated : 29 Apr, 2020 12:15 PM

 

Published : 29 Apr 2020 12:15 PM
Last Updated : 29 Apr 2020 12:15 PM

தான் காய்கனி வியாபாரம் செய்த அதே கைவண்டியில் மரணம்: ஆம்புலன்ஸ் வராததால் தாமதமாக இட்டுச் செல்லப்பட்ட சிறுவியாபாரி ஆஸ்துமாவுக்குப் பலி

கோட்டா (ராஜஸ்தான்)

நாடு முழுதும் லாக் டவுன் காரணமாக நோயாளிகளைக்கூட மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் அழைத்துச் செல்ல முடியாத நிலைதான் உள்ளது. ராஜஸ்தானில் இவ்வகை மரணங்களில் ஒன்றாக கோட்டா என்ற இடத்தில் ஆஸ்துமா நோயாளி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளது அங்கு மக்களிடையே கோபாவேசத்தை அதிகரித்துள்ளது.

ஆம்புலஸ் வரவில்லை, ஆஸ்த்மா நோயாளியை இதனால் கைவண்டியில் மருத்துவமனைக்கு இட்டுச் செல்ல நேரிட்டது, இதனால் ஏற்பட்ட தாமதத்தினால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது நோயாளி இறந்து விட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

போலீஸாரும், மருத்துவ அதிகாரிகளும் அலட்சியம் காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்தனர். காய்கறி வியாபாரியான சதீஷ் அகர்வால், கோட்டாவின் ராம்புரா பகுதியில் உள்ள ஊரடங்கில் உள்ள ஃபைத்தகாடியில் வசித்து வந்தார்.

இவருக்கு ஆஸ்துமா நோய் முற்றியது, இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்க முயன்றனர், ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை, இதனையடுத்து எம்பிஎஸ் மருத்துவமனைக்கு கைவண்டியில் அழைத்து சென்றனர். அதாவது அவர் காய்கனி விற்ற அதே கைவண்டியிலேயே மருத்துவமனைக்கு இட்டுச் செல்லப்பட்டார்.

இவரது மகன் மணீஷ் கூறும்போது பல முறை ஆம்புலஸ் அழைக்கப்பட்டும் வரவில்லை, ஒரே ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வர ஒப்புக் கொண்ட போது நான் என் தந்தையை அவர் காய்கறி விற்கும் கைவண்டியிலேயே அழைத்துச் சென்றேன். இரண்டரை கிலோ மீட்டர் தூரம்தான், வழியில் போலீஸார் சாலைத் தடுப்புகளை நீக்கி உதவினார்களே தவிர தங்கள் வண்டியைக் கொடுத்து உதவவில்லை.

அப்படியிப்படி மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் அறை அறையாக அலைந்தோம். கடைசியாக டாக்டர்கள் வந்து தந்தை இறந்து விட்டார் என்றனர், என்று கூறுகிறார் அவர் மகன் வேதனையுடன்.

அதாவது அவர் தான் வியாபாரம் செய்த தன் கைவண்டியிலேயே மரணமடிந்துள்ளதாகத் தெரிகிறது.

மருத்துவமனை அதிகாரி டாக்டர் நவீன் சக்சேனா வழக்கம் போல் புகார்களை மறுத்தார்.

சதீஷ் அகர்வால் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பாட்டார், மருத்துவர்கள் அவரை உடனடியாகச் சோதனை செய்தோம் அவர் ஏற்கெனவே இறந்திருந்தார் என்றார்.

அவர்கள் கேட்ட போது ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இல்லை என்று மருத்துவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x