கரோனா வைரஸைப் பரப்பிவிட்டு இப்போது கரோனா போர்வீரர்களாக மாறுகிறார்கள்: தப்லீக் ஜமாத் குறித்து முக்தர் அப்பாஸ் நக்வி சாடல்

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர்அப்பாஸ் நக்வி : கோப்புப்படம்
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர்அப்பாஸ் நக்வி : கோப்புப்படம்
Updated on
1 min read

தங்களின் கிரிமினல் செயலால் கரோனா வைரஸைப் பரப்பி பாவத்தைச் செய்தவர்கள், இப்போது பிளாஸ்மா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்கிறேன் என கரோனா போர் வீரர்களாக மாறுகிறார்கள் என தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர்அப்பாஸ் நக்வி சாடியுள்ளார்

டெல்லி தப்லீஸ் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று சென்ற உறுப்பினர்கள் மூலம்தான் கரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது முஸ்லிம்கள் மீது அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டதை கடந்த வாரம் முக்தர் அப்பாஸ் நக்வி கண்டித்தார். ஒரு குறிப்பிட்ட குழுவினர் செய்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த சமூகத்தையே குறை சொல்லக்கூடாது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் விடுத்த கோரிக்கையில், “ கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, கரோனாவா பாதிப்பிலிருந்து குணமடைந்த 10-க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வந்தனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கும் தப்லீக்ஜமாத் உறுப்பினர்களும் பிளாஸ்மா தானம் செய்ய முன் வருவதாகத் தெரிவி்த்தனர்

இதைக் கடுமையாக விமர்சித்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர்அப்பாஸ் நக்வி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “தங்களது குற்ற நடத்தை மூலம் கரோனாவைப் பரப்பி தப்லீக் உறுப்பினர் பாவம் செய்துவிட்டார்கள். இப்போது தங்களை “கரோனா போர் வீரர்கள்” என்று கூறிக்கொள்கிறார்கள். வியப்பாக இருக்கிறது. அவர்கள் செய்த குற்றத்திற்கு வெட்கப்படுவதற்குப் பதிலாக, தப்லீக் உறுப்பினர்கள் லட்சக்கணக்கான கரோனா போர் வீரர்களை அவமதிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்

மற்றொரு ட்விட்டில் “ உண்மையில் தேவையுள்ள கரோனா நோயாளிகளுக்கு சில தேசபக்தி மிகுந்த முஸ்லிம்கள் பிளாஸ்மா தானம் செய்கிறார்கள். அவர்களை தப்லீக் ஜமாத் அமைபைச் சேர்ந்தவர்கள் என அழைப்பது சரியல்ல. ஒவ்வொரு இந்திய முஸ்லிமையும் தப்லீக் அமைப்பினராகக் காட்டிக்கொள்ள முயல்வது தப்லீஸ் ஜமாத்தின் நன்குதிட்டமிட்டமோசமான சதித்திட்டம்” எனத் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in