

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சபீர் அகமது ஷா நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஹுரியத் மாநாடு அமைப்பின் மிதவாத அணியில் இருந்து கடந்த ஆண்டு பிரிந்த சபீர் அகமது ஷா, ஜனநாயக சுதந்திர கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் சபீர் அகமது ஷாவின் வீட்டுக்கு நேற்று காலை சென்ற போலீஸ் படையினர், அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளதாக கூறினர்.
ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் சையது அலிஷா கிலானியும் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹுரியத் மாநாடு, மிதவாத தலைவர் மிர்வைஸ் உமர் பரூக், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகம்மது யாசின் மாலிக் உள்ளிட்ட பிரி வினைவாத தலைவர்கள் நேற்று முன்தினம் வீட்டுக் காவலில் வைக் கப்பட்டனர். ஆனால் சில மணி நேரத்தில் இவர்கள் விடுவிக்கப் பட்டனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இதில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஸ் அஜீஸை சந்திக்க வருமாறு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு விடுத்தது. இது இந்திய அரசை கவலை அடையச் செய்துள்ளது.