

இந்தியாவில் மரண தண்டனை அவசியம் என்று ஒரு சாராரும் தேவையில்லை என்று மற்றொரு சாராரும் வலியுறுத்தி வருகின்ற னர்.
இந்நிலையில் திரிபுரா மாநில சட்டப்பேரவையில், மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்க வேண்டும், இதுதொடர்பாக மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்றுமுன்தினம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல் ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். ரத்தன் லால் நாத் என்ற காங்கிரஸ் எம்எல்ஏ மட்டும் நடுநிலையைக் கடைப்பிடித்தார். இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.