நிலம் மசோதா: கூட்டுக் குழுவுக்கு 4 நாள் அவகாசம்

நிலம் மசோதா: கூட்டுக் குழுவுக்கு 4 நாள் அவகாசம்
Updated on
1 min read

லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கு நடுவே, நிலம் கையக மசோதா குறித்து ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் எஸ்எஸ் அலுவாலியா (பாஜக), அறிக்கை தாக்கல் செய் வதற்கு வரும் 7-ம் தேதி வரை (4 நாட்கள்) கூடுதல் அவகாசம் கேட்டு தீர்மானம் தாக்கல் செய்தார்.

இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.

முன்னதாக, இந்த அவகாசம் போதுமானதாக இருக்காது என இக்குழுவில் இடம்பெற்றுள்ள சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.

இந்த அறிக்கையை 9-ம் தேதி இறுதி செய்து, 10-ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in