Last Updated : 25 Apr, 2020 04:09 PM

 

Published : 25 Apr 2020 04:09 PM
Last Updated : 25 Apr 2020 04:09 PM

லாக் டவுன் காலத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம்: யூஜிசியிடம் இரு நபர் குழு பரிந்துரை

கோப்புப்படம்

புதுடெல்லி

பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் புதிய வகுப்புகளை வரும் ஜூலை மாதம் தொடங்குவதற்குப் பதிலாக செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) அமைத்த இரு நபர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஹரியாணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.சி.குஹத், இந்திராகாந்தி திறந்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட குழு இந்தப் பரிந்துரைகளை அளித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் நடப்புக் கல்வியாண்டுக்கான தேர்வுகளை நடத்த முடியாமல்போனது. மேலும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் 29 பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு துணைவேந்தர்கள் ஆர்சி குஹத், நாகேஸ்வர் ராவ் தலைமையில் இருநபர் குழுவை அமைத்து, கரோனா காலத்தில் கல்வித்துறையில் அடைந்த பாதிப்புகள், எவ்வாறு நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது, ஆல்லைன் கல்வி ஆகியவை குறித்து ஆய்வு செய்யக் கூறியது.

இதில் துணைவேந்தர் ஆர்.சி.குஹத் அளித்த அறிக்கையில், “ லாக் டவுன் காலத்தில் பல்கலைக்கழகத்தில் நடக்க முடியாமல் போன தேர்வுகளை நடத்துவது குறித்து, அடுத்த கல்வியாண்டை எப்போது தொடங்குவது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்குவதற்குப் பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது

துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையில், ''இப்போதுள்ள சூழலில் ஆன்லைன் கல்வியை வளர்த்தெடுப்பது சிறந்தது. அதுதான் மாற்றுவழி. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதி இருந்தால் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம். இல்லாவிட்டால் லாக் டவுன் முடிந்த பின் தேர்வுத் தேதிகளை முடிவு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த இரு துணைவேந்தர்கள் அளித்த பரிந்துரைகளையும் மனித மனித வளத்துறை ஆய்வுசெய்து வருகிறது. இதை விரிவாக வல்லுநர்களிடம் கலந்தாய்வு செய்து அடுத்த வாரத்தில் அறிவிப்புகளை அரசு வெளியிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மனிதவளத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அனைத்துப் பரிந்துரைகளையும் நாங்கள் ஏற்றுக்கொண்டதாக நினைக்க வேண்டும். சூழலைக் கருத்தில் கொண்டு எது சாதகமான அம்சங்களோ அவை எடுத்துக்கொள்ளப்படும். வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x