Published : 24 Apr 2020 07:13 PM
Last Updated : 24 Apr 2020 07:13 PM

டெல்லி உயிரியல் பூங்காவில் புலி உயிரிழப்பு; கரோனா சோதனைக்கு உத்தரவு?

புதுடெல்லி 

டெல்லியில் புலி ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் கரோனா காரணமாக உயிரிழந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் கடந்த 5ஆம் தேதி 4 வயதான மலேசியாவின் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும், மூன்று ஆப்ரிக்க நாட்டு சிங்கங்களுக்கும் கரோனா பரவியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மனிதர்களிடம் இருந்து இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கு வைரஸ் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதன்முறையாக இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கும், மேலும் 7 வனவிலங்குகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உரிமையாளரிடம் இருந்து ஒரு பூனைக்கு கரோனா பரவி இருக்கலாம் எனத் தெரிகிறது.


இதையடுத்து, தங்கள் செல்லப்பிராணிகளை வீட்டிற்கு வெளியே விட வேண்டாம் என்றும் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள உயிரியில் பூங்காவில் புலி ஒன்று உயிரிழந்துள்ளது. 14 வயதான பெண் புலி சிறுநீரக கோளாறு காரணமாக சில காலம் அந்த புலி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் அந்த புலியின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பரவல் இருந்ததா என்பது குறித்த ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு மரணடைந்த புலியின் மாதிரிகள் அனுப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x