டெல்லியில் விவசாய நிலங்களை வர்த்தக பயன்பாட்டுக்கு மாற்றும் விதிகளை எளிமைப்படுத்த முயற்சி

டெல்லியில் விவசாய நிலங்களை வர்த்தக பயன்பாட்டுக்கு மாற்றும் விதிகளை எளிமைப்படுத்த முயற்சி
Updated on
1 min read

டெல்லியில் விவசாய நிலங்களை குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான விதிகளை எளிமைப்படுத்த அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.

டெல்லியில் தற்போதுள்ள சட்டப்படி, விவசாய நிலத்தை குடியிருப்பு அல்லது வணிக பயன்பாட்டுக்கு மாற்ற அதன் உரிமையாளருக்கு மட்டுமே உரிமை உண்டு. இத்துடன் அரசின் சில கடுமையான விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

இந்நிலையில் டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, வருவாய்த் துறை செயலாளருக்கு ஓர் உத்தரவு பிறப் பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், “தற்போது டெல்லியில் விவசாய நிலத்தை வேறு பயன் பாட்டுக்கு மாற்ற, டெல்லி நிலச் சீர்திருத்தச் சட்டம் (1954), பிரிவு 33 மற்றும் 81-ல் உள்ள விதிகள் கடுமையாக உள்ளன. இந்த விதிகளை தளர்த்தும் ஆலோசனை களை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் வைக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் நிலங்களின் நிர்வாகம் மத்திய அரசின் கீழ் வருகிறது. இந்நிலையில் நிலச்சீர்த் திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப் படும் திருத்தங்கள் மாநில அமைச் சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும். பின்னர் இந்த திருத்தங்களை மத்திய அரசு சரிபார்த்த பின், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும். அதன் பின்னரே இச்சட்டத் திருத்தம் அமலுக்கு வரும். எனவே நாடாளுமன்றத்தின் வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இது தொடர்பான சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படும் வகையில் கேஜ்ரிவால் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லியின் உயரதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “விதிகளை எளிமைப்படுத்துவதில் மத்திய அரசு சாதகமாக இருக்கும் என்றே கருதுகிறோம். இந்த திருத்தத்துக்கு பின், பிற பயன்பாட்டுக்கு மாற்றப் பட்ட விவசாய நிலங்களில் டெல்லி மாஸ்டர் பிளான் 2021-ன் கீழ் கட்டிடங்கள் கட்டப்படும். இவை மாஸ்டர் பிளான் விதிகளை மீறாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும். விதிகளை மீறும் கட்டிடங்களுக்கு எக்காரணம் கொண்டும் பயன்பாட்டுக்கு அனுமதி தரக்கூடாது எனவும் கேஜ்ரி வால் அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தனர்.

டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான முந்தைய ஆட்சியில் ‘மாஸ்டர் பிளான் 2021’ திட்டமிடப்பட்டு, ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in