பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு: ஹரியாணா முதல்வர் அறிவிப்பு

பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு: ஹரியாணா முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

ஹரியாணா மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அத்தியாவசிய சேவை பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை பத்திரிகையாளர் கள் மக்களுக்கு அளித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 70-க் கும் மேற்பட்ட பத்திரிகையாளர் களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மும்பையில் 53 பேருக்கும் சென்னையில் 20-க்கும் மேற்பட் டோருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல மாநிலங்களில் பத்திரிகை யாளர்களுக்கு சிறப்பு பரிசோத னைகள் நடக்கின்றன.

இந்நிலையில், பத்திரிகை யாளர்களின் நலன் கருதி ரூ.10 லட்சம் காப்பீடு வழங்க ஹரியாணா அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட் டார் வெளியிட்டுள்ள செய்தி யில், ‘‘கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் பத்திரிகையா ளர்கள் அது தொடர்பான செய்தி களை வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கின்றனர். பத்திரிகையாளர் நலன் கருதி ஹரியாணாவில் பணியில் ஈடுபட்டிருக்கும் பத்திரி கையாளர்கள் அனைவருக் கும் தலா ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும்’’ என்று தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in