

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களால் நாட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவிய தாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட குழுவினரின் இந்த நடவடிக்கையை முஸ்லிம் சமூகத் தின் பெரும்பாலானவர்கள் கண்டித்துள்ளனர். எனவே, கரோனா வைரஸ் பரவலுக்காக ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை பொருப்பாக்க முடியாது.
புனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் ஊரடங்கு விதிமுறை களை கடைபிடிப்பார்கள் என்ற நம் பிக்கை உள்ளது. ரம்ஜான் மாதத் தில் மசூதிகளில் இப்தார் விருந்து கள், சிறப்பு தொழுகைகள் நடத்துவ தில்லை என்று நாடு முழுவதும் உள்ள இமாம்கள் உலமாக்கள், முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
ஊரடங்கு விதிகளின்படி சமூக இடைவெளியைப் பின்பற்றி வீட்டிலேயே இவற்றை நடத்த முஸ்லிம்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். மாநில வக்பு வாரியங்களின் நிர்வாகிகள், சமூக, மதத் தலைவர்கள் சமூக இடை வெளி குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.