டெல்லியில் தப்லீக் ஜமாத் கூட்டத்துக்கு சென்ற ரோஹிங்கியாக்களை தேடி வரும் போலீஸார்

டெல்லியில் தப்லீக் ஜமாத் கூட்டத்துக்கு சென்ற ரோஹிங்கியாக்களை தேடி வரும் போலீஸார்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவல் காரண மாக கடந்த மார்ச் 31-ல் தப்லீக்-எ-ஜமாத்தின் தலைமையகம் காலி செய்யப்பட்டது. இங்கு தங்கி யிருந்த தமிழகம் உள்ளிட்ட பெரும் பாலான மாநிலத்தவரும், வெளி நாட்டவர்களும் வெளியேற்றப் பட்டனர். ஜமாத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட வெளி நாட்டவர்களின் மூலம் பலருக்கு கரோனா தொற்று பரவியது மருத் துவ பரிசோதனை மூலம் தெரிய வந்தது.

இந்நிலையில் தப்லீக் ஜமாத் தார் மாநாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்களும் கலந்து கொண் டிருந்தது தற்போது தெரிய வந்துள் ளது. மியான்மரை சேர்ந்த இவர் கள் அகதிகளாக டெல்லி, ஹரி யானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள முகாம் களில் தங்கியிருந்தவர்கள் என தெரிகிறது.

இவர்கள் அனைவரும் தப்லீக் கின் கூட்டம் முடித்து தலைமை யகத்தில் இருந்து கிளம்பி விட்ட னர். எனினும் அவர்கள் அகதிகள் முகாம்களுக்கு திரும்பியதாகத் தெரியவில்லை. எனவே, அவர் களை தற்போது டெல்லி போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களில் எவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அது மேலும் பலருக்கு பரவ வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லி காவல் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும் போது, ‘‘ரோஹிங்கியாவினர் எண் ணிக்கை குறித்த பதிவேடுகள் அவர்கள் முகாம்களில் உள்ளன. இவற்றில், தப்லீக் ஜமாத்துக்கு சென்றவர்கள், திரும்பி வந்தவர் களின் குறிப்புகள் எதுவும் இல்லை. எனினும் அவர்களும் மாநாட்டுக்கு வந்ததாக தப்லீக்கினர் தகவல் அளித்ததால் அவர்களை தேடி வரு கிறோம். இவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கைப்பேசி களும் அவர்களிடம் இருப்ப தில்லை’’ எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in