

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எப்போது உச்ச அளவை தொடும் என்பதை கூறுவது கடினம் என இதுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எப்போது உச்ச அளவை தொடும் என்பதை கூறுவது கடினம் என இதுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர் பல்ராம் பார்கவா கூறியதாவது:
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எப்போது உச்ச அளவை தொடும் என்பதை கூறுவது கடினம். ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் மே 3-ம் தேதி அன்றுக்குள் உச்ச அளவை எட்டுமா அல்லது அதற்கு பிறகா என்பதை உறுதியாக கூற முடியாது. எனினும் ஒன்றை மட்டும் நாம் தெளிவாக கூற முடியும். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவும் வேகம் என்பது பொதுவாக குறைந்தே வருகிறது. அதுபோலவே குணமடைந்து திரும்புபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.