நகரங்களுக்கு வெளியே கட்டுமானம் தொடங்க அனுமதி: மேலும் 17 துறைகளில் லாக்டவுன் விதிகளை தளர்த்தியது கர்நாடக அரசு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

நகரங்களுக்கு வெளியே கட்டுமானம் தொடங்க அனுமதி வழங்கியுள்ள கர்நாடக அரசு மேலும் 17 துறைகளில் லாக்டவுன் விதிகளை தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு சற்றே குறைவாக உள்ள பகுதிகளில் முற்றிலுமாக அல்லாமல் ஓரளவுக்கு லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் முக்கியமான 17 சேவைகள்/துறைகளில் லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.

இதுகுறித்து அரசு அறிவிக்கையொன்றை வெளியிட்டுள்ள கர்நாடக தலைமைச் செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர், ''கூடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது சமூக விலகல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்வதற்கான பொறுப்பு மாநில அதிகாரிகளுக்கு உண்டு'' என்றார்.

கர்நாடக அரசு தளர்த்தியுள்ள விதிமுறைகள் குறித்து அரசு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நகராட்சி நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு வெளியே கிராமப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சாலை, நீர்ப்பாசன திட்டங்கள், கட்டிடங்கள் மற்றும் சிறு, குறு, மற்றும் நடுத்தர, உள்ளிட்ட அனைத்து வகையான தொழில்துறை திட்டங்கள் தொடர்பான கட்டுமான நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகிறது.

தொழில்துறை பகுதிகளில் கட்டுமான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் அதே நேரம் ஆட்கள் உள்ளூரிலிருந்து மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.

சிமென்ட், எஃகு, செங்கல், சரளை, ஓடுகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் உட்பட அனைத்து பொருட்களின் போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகிறது. பொருட்களை வழங்க லாரி இயக்கம் அனுமதிக்கப்படுகின்றன.

தொழிலாளர்கள் சமூக தூரத்தை கடைபிடிக்க வேண்டும் மற்றும் முகக்கவசங்களை அணிய வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் தேசிய ஊரக வேலை வாயப்பு உறுதித் திட்டப் பணிகள் அனுமதிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பில் 50% தொழிலாளர்கள் கொண்ட காபி மற்றும் தேயிலை தோட்டங்களில் தோட்ட வேலைகளை அனுமதித்க்கப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு லாக்ட வன் விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. துறைமுகங்கள் மற்றும் விமான சரக்கு தொடர்பான நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன,

அங்கன்வாடி நடவடிக்கைகள்

அங்கன்வாடிகளைப் பொறுத்தவரை, குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்ற பயனாளிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை உணவுப் பொருட்களை விநியோகிக்க அனுமதிக்கப்படுகிறது.

சமூகத் துறையில் கவனம் செலுத்துவதன் மூலம், முதியவர்கள், விதவை, உடல் ரீதியான சவால் மற்றும் சுதந்திரப் போராளிகள் ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி சேவைகள் போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்களை வழங்குவதற்கு அதிகாரிகளை அனுமதித்துள்ளது.

மெட்ரோ வேலை

கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக மெட்ரோ திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், பெங்களூரு மெட்ரோவின் பி.எம்.ஆர்.சி.எல் கட்டுமான நடவடிக்கைகளுக்கு திருத்தப்பட்ட அறிவிக்கை பொருந்தும் . ஆனால் தொழிலாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வருவதற்கு பதிலாக உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

சுற்றுலாப் பயணிகளான ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஹோம்ஸ்டேக்களில் கோவிட் 19 காரணமாக சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் நீர் பயன்பாடுகளின் செயல்பாடு எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும்பட்சத்தில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையும் அதன் பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in